கோவை: மாடு மேய்க்க சென்ற மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை உட்பட 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்…
2022ஆம் ஆண்டு பேரூர் மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டி மாடு மேய்க்க சென்ற போது ஒரு நபரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. இது சம்பந்தமாக பேரூர் அனைத்து மகளிர் காவல் துறையினர் 376 ஐ.பி.சி. உள்ளிட்ட பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையின் அடிப்படையில் வேலுச்சாமி என்பவரை கைது செய்தனர். பாதிக்கப்பட்ட மூதாட்டி பட்டியல் இன சமூகத்தை சார்ந்தவர் என்பதனால், எஸ்சி/எஸ்டி நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து வந்தது.
இந்நிலையில் இன்று விசாரணை முடிந்து தீர்ப்பு வழங்கப்பட்டது. நீதிபதி விவேகானந்தர் தீர்ப்பளித்தார். அதில் குற்றம் சாட்டப்பட்ட வேலுச்சாமிக்கு ஐபிசி 325க்கு 7 ஆண்டு கடுங்காவல் தண்டனை ஐயாயிரம் ரூபாய் அபராதம் கட்ட தவறினால் மூன்று ஆண்டு சிறை தண்டனையும், எஸ்சி எஸ்டி act சட்ட பிரிவின் கீழ் 7 ஆண்டு கடுங்காவல் 3000 ரூபாய் அபராதம் கட்ட தவறினால் மூன்று ஆண்டுகள் சிறை, 506 (1) சட்ட பிரிவுக்கு 2 ஆண்டு கடுங்காவல் கட்ட தவறினால் மூன்று ஆண்டுகள் சிறை, ஐ.பி.சி. 376க்கு ஒரு ஆயுள் தண்டனை பத்தாயிரம் ரூபாய் அபராதம் கட்ட தவறினால் ஆறு மாத சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார்.
இவர் மீது 2024 ஆம் ஆண்டு பசுமாட்டை பாலியல் துன்புறுத்த செய்த வழக்கு விசாரணையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.