கோவையில் அதிர்ச்சி: இளம் பெண் பலாத்காரம்

கோவை: கோவையில் வீட்டில் தனியாக இருந்த மாற்றுத் திறனாளி இளம் பெண்ணை பலாத்காரம் செய்த ஜவுளிக்கடை ஊழியரை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு மாவட்டம், தாளவாடியைச் சேர்ந்தவர் மகேஷ் (வயது 32). இவர் கோவையில் தங்கியிருந்து காந்திபுரத்தில் உள்ள ஒரு ஜவுளிக் கடையில் வேலை செய்து வந்தார். அதே ஜவுளிக்கடையில் கோவையைச் சேர்ந்த 20 வயதான மாற்றுத் திறனாளிப் பெண்ணும் அவருடைய தாயாரும் வேலை செய்து வருகிறார்கள்.

இந்நிலையில் அந்த இளம் பெண்ணுக்கு நேற்று முன்தினம் விடுமுறை என்பதால், அவர் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது மகேஷ் அந்த இளம் பெண் வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் அவரிடம் பக்கத்தில் ஒரு வேலை விஷயமாக வந்ததாகவும், கொஞ்சம் குடிக்க தண்ணீர் கொடு என்று கேட்டு உள்ளார்.

உடனே அந்த இளம் பெண் தண்ணீர் எடுக்கச் சென்ற போது மகேஷ் வீட்டுக்குள் சென்று இளம் பெண்ணை கட்டிப்பிடித்துள்ளார். உடனே அதிர்ச்சி அடைந்த அவர் ஏன்? இப்படி செய்கிறீர்கள் என்று கூறியபடி தப்பிக்க முயற்சி செய்துள்ளார்.

ஆனால் அவரால் முடியவில்லை, பின்னர் அவரை வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்று மகேஷ் பலாத்காரம் செய்தார்.

பிறகு இதை வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவதாக கூறிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றார். இதனால் பாதிக்கப்பட்ட இளம் பெண் இதுகுறித்து அவரது தாயாரிடம் கூறி அழுதார்.

அதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தவர். இதுகுறித்து காட்டூரில் உள்ள கோவை மாநகர மத்திய மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அத்துடன் தலைமறைவாக இருந்த மகேஷை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

போத்தனூரில் சிறுத்தையா? வைரலாகும் வீடியோ… வனத்துறை கூறுவது என்ன?

கோவை போத்தனூரில் சிறுத்தை நடமாட்டம் என வைரலான வீடியோ குறித்து வனத்துறை விளக்கம் அளித்துள்ளது. அது சிறுத்தை அல்ல, காட்டு பூனை என அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

Video

போத்தனூரில் சிறுத்தையா? வைரலாகும் வீடியோ… வனத்துறை கூறுவது என்ன?

கோவை போத்தனூரில் சிறுத்தை நடமாட்டம் என வைரலான வீடியோ குறித்து வனத்துறை விளக்கம் அளித்துள்ளது. அது சிறுத்தை அல்ல, காட்டு பூனை என அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.