கோவை: காதல் ஊஞ்சலாடுகிறது என 3 கிராம் தங்கத்தில் ஜிமிக்கி வடிவமைத்துள்ளார் கோவையை சேர்ந்த தங்க நகை வடிவமைப்பாளர் UMT ராஜா.
காதல் ஊஞ்சலாடுகிறது என்ற தலைப்பில் 3 கிராம் தங்கத்தில் ஜிமிக்கியை வடிவமைத்துள்ளார் கோவையை சேர்ந்த கலைஞர்.
காதலர் தினத்தை முன்னிட்டு கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த UMT ராஜா என்பவர் காதல் ஊஞ்சலாடுகிறது என்பதை மையமாக கொண்டு பெண்கள் அணியும் கம்மலின் ஜிமிக்கியை வடிவமைத்துள்ளார்.

3 கிராம் தங்கத்தில் ஜிமிக்கியில் காதலர்கள் ஊஞ்சலாடுவது போல் வடிவமைத்துள்ளார். இதில் காதல் சின்னமும் லவ் என்ற எழுத்தும் இடம்பெற்றுள்ளது. இதை ஒருநாள் செலவழித்து இதனை வடிவமைத்துள்ளதாக தெரிவித்துள்ள அவர் காதலர் தின வாழ்த்துக்களையும் தெரிவித்து கொண்டுள்ளார்.

