தங்கம் விலை வரலாறு காணாத உயர்வு!

கோவை: தங்கம் விலை இன்று வரலாறு காணாத விலை உயர்வைச் சந்தித்துள்ளது.

இந்த ஆண்டின் தொடக்கம் முதலே தங்கம் விலை அதிகரித்து வருகிறது. கடந்த 3ம் தேதிக்குப் பிறகு விலை சற்றே சரிந்தது. ஆனால், கடந்த 9ம் தேதிக்குப் பிறகு தங்கம் விலை மீண்டும் அதிகரித்து வருகிறது.

இதனிடையே தங்கம் விலை இன்று மீண்டும் வரலாறு காணாத விலை உயர்வைச் சந்தித்துள்ளது. அட்சயதிருதியை முன்னிட்டு தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்து வருவதாக விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கோவையில் இன்று 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.275ம், பவுனுக்கு ரூ.2,200ம் அதிகரித்து அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

இன்று ஒரு கிராம் ரூ.9,290க்கும், ரூ.74,320க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

18 காரட் தங்கம் விலையும் அதிகரித்துள்ளது. பவுனுக்கு ரூ.1,840 உயர்ந்து, தற்போது ஒரு பவுன் ரூ.61,520க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளி விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் ரூ.111க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,11,000க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Recent News

Latest Articles