கோவையிலும் உயர்நீதிமன்ற கிளை வேண்டும்- பாமக வழக்கறிஞர் பாலு கோரிக்கை…

கோவை: சென்னை உயர்நீதிமன்றத்தின் கிளைகிளை கோவையில் உருவாக்க வேண்டுமென பாமக வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

கோவையில் பாமக வழக்கறிஞர் பாலு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஐந்தாம் தேதி ஓய்வு பெற உள்ள நிலையில் மத்திய பிரதேசத்தை சேர்ந்த நீதி அரசர் அரவிந்த் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக வரவுள்ளதை ஒட்டுமொத்த வழக்கறிஞர்கள் தமிழக மக்களின் சார்பில் வரவேற்பதாக தெரிவித்தார்.

உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் நியமனம் தொடர்பான பரிந்துரை அரசால் நிறைவேற்றப்படாமல் இருந்து வருகிறது என குறிப்பிட்ட அவர் அதனை உடனடியாக நிறைவேற்ற வேண்டும், 24 நீதிபதிக்கான பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் நீதிபதிகள் இல்லாததால் பல்வேறு வழக்குகள் தேக்க நிலையில் இருப்பதாக தெரிவித்தார்.

கோவை மாவட்டத்திலும் உயர் நீதிமன்ற கிளை ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்த அவர் கோவை திருப்பூர் கரூர் நீலகிரி போன்ற இப்பகுதி மாவட்டங்களில் உள்ளவர்கள் வழக்கு நடத்துவதற்காக சென்னை செல்ல வேண்டிய சூழல் நிலவுவதாகவும் பல்வேறு சிரமங்களையும் சந்திப்பதாகவும் தெரிவித்த அவர் உடனடியாக கோவையில் உயர்நீதிமன்ற கிளை ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.

இந்தியாவை எடுத்துக் கொண்டால் ஒரு நீதிமன்றத்தின் கிளை பல்வேறு இடங்களில் இருப்பதாக தெரிவித்த அவர், தமிழகத்தில் ஒரு கிளை மட்டுமே இருப்பதாகவும் மத்திய பிரதேசத்தில் இரண்டு கிளைகள் கர்நாடகாவில் இரண்டு கிளைகள் ஆந்திர பிரதேசத்தில் மூன்று கிளைகள் கல்கத்தாவில் இரண்டு கிளைகள் மகாராஷ்டிராவில் மும்பை அல்லாமல் நான்கு இடங்களில் உயர்நீதிமன்ற கிளைகள் இருப்பதாக கூறினார். கோவை மாவட்டத்தில் உயர் நீதிமன்ற கிளை அமைவதற்கு பார் கவுன்சில் சார்பில் அனைத்து முன்னெடுப்புகளையும் முன்னெடுப்பதாகவும் அது குறித்த கோரிக்கைகளை உயர்நீதிமன்ற நீதிபதிகள் முதல குடியரசுத் தலைவர் வரை தருவோம் என தெரிவித்தார்.

கீழமை நீதிமன்ற நீதிபதிகளுக்கு பல்வேறு நிபந்தனைகளை உயர்நீதிமன்றம் விதிக்கிறது. சென்னை உயர்நீதிமன்றத்தில் 25 நீதிபதிகளுக்கான பணியிடங்கள் காலியாக இருப்பதாகவும் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு நீதிபதி பணியிடங்கள் காலியாக இருப்பதாகவும் இதனால் வழக்குகள் தேக்கநிலை என்பது அதிகமாக இருக்கிறது எனவே முழுமையான நீதிபதிகள் பணியமர்த்தப்பட்டால் தான் வழக்குகளின் தேக்க நிலை என்பதை குறைக்க முடியும் என்றார்.

சட்டங்கள் மாற்றப்பட்டதால் பல்வேறு சிரமங்களை வழக்கறிஞர்களும் நீதிபதிகளும் சந்தித்து வருவதாக தெரிவித்த அவர் BNS போன்ற புதிய சட்டங்கள் வந்ததை தொடர்ந்து அதனையும் இதற்கு முன்பு இருந்த சட்டங்களையும் புரிந்து கொண்டு வாதிட வேண்டும் தீர்ப்பு வழங்க வேண்டும் என்றார்.

தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சில் தேர்தல் பரப்புரை என்பது தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வருவதாக தெரிவித்த அவர் இந்த பரப்புரையில் நான் போட்டியாளராக இருப்பதாகவும் என்னுடைய வாக்குறுதிகளாக வழக்கறிஞர்களுக்கு தெரிவிப்பது என்னவென்றால் வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டம் உடனடியாக தேவைப்படுகிறது என்றார்.

வழக்கறிஞர்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லாத நிலை என்பது தமிழகத்தில் இருந்து வருவதாகவும் பல்வேறு வழக்குகளில் காவல்துறையினர் வழக்கறிஞர்களையும் அந்த வழக்குகளில் சேர்த்து விடுவதாக தெரிவித்தார். பல்வேறு இடங்களில் வழக்கறிஞர்கள் தாக்கப்படுவதாகவும் கூறினார்.

பார் கவுன்சில் தேர்தல் என்பது உலகத்திலேயே இல்லாத அளவிற்கு ஒரு வினோதமான தேர்தல் என குறிப்பிட்ட அவர் பார் கவுன்சில் தேர்தல் என்பது கன்னியாகுமரி முதல் கும்மிடிப்பூண்டி வரை உள்ள வழக்கறிஞர்கள் ஒரு உறுப்பினருக்கு வாக்களிக்க வேண்டும் என்றார்.

1 லட்சத்து 20 ஆயிரம் வழக்கறிஞர்கள் இருக்கின்ற சூழலில் அவர்களை பகுதிவாரியாக பிரித்து பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும் எனவும் அதிக வாக்குகள் பெற்ற வேட்பாளரை வெற்றி பெற்ற ஒரு ராதா அறிவிக்க வேண்டும் என தெரிவித்தார். மேலும் பகுதி வாரியாக வேட்பாளர்களை நிறுத்துவதற்கான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார். மேலும் வளர்க இளைஞர்களுக்கு 25 லட்சம் ரூபாய் சேம நல நிதியை வழங்க வேண்டும் என்றார்.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

ஆண்டின் முதல் சந்திர கிரகணம் 2026: என்ன செய்யலாம்? என்ன கூடாது?

மார்ச் 3ம் தேதி நடைபெறும் ஆண்டின் முதல் சந்திர கிரகணம் மற்றும் ரத்த நிலவு பற்றிய முழு தகவல்கள். கிரகண நேரம், பார்க்கலாமா?, என்ன செய்யலாம்? தெரிந்துகொள்ளுங்கள்.

Video

போத்தனூரில் சிறுத்தையா? வைரலாகும் வீடியோ… வனத்துறை கூறுவது என்ன?

கோவை போத்தனூரில் சிறுத்தை நடமாட்டம் என வைரலான வீடியோ குறித்து வனத்துறை விளக்கம் அளித்துள்ளது. அது சிறுத்தை அல்ல, காட்டு பூனை என அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.