கோவை:கோவையில் கள்ளக்காதல் தொடர்பான தகராறில் இளம்பெண் ஒருவர் கட்டையால் அடித்து கொலை செய்யப்பட்டு, உடலில் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
துடியலூர் அருகே உள்ள வட்டமலை பாளையம் அருகில் ராமகிருஷ்ணா இன்ஜினியரிங் கல்லூரி பின்புறத்தில் உள்ள புதர் பகுதியில் பாதி எரிந்து உடல் கருகிய நிலையில் இளம்பெண் உடல் நேற்று கிடந்தது. இதுகுறித்து வேடம்பட்டி கிராம நிர்வாக அதிகாரி பாண்டி துடியலூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.
இன்ஸ்பெக்டர் தவசியப்பன் மற்றும் போலீசார் அந்த இளம் பெண்ணின் உடலை மீட்டு விசாரணை நடத்தினர்.
அந்த பெண்ணின் தலையில் பலமாக கட்டையால் தாக்கிய காயம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதிலிருந்து இந்த நிலையில் அவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது நிரூபணமானது.
முதற்கட்ட விசாரணையில், அந்த இளம் பெண் கள்ளக்காதல் விவகாரத்தில் அடித்து கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. கொலை செய்யப்பட்ட அந்த இளம் பெண், ஏற்கனவே திருமணம் ஆனவர் என்றும் அதே பகுதியைச் சேர்ந்த திருமணமான வாலிபருக்கும் அந்த பெண்ணுக்கும் கள்ளக்காதல் இருந்து வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் இவர்கள் இருவருக்கும் திடீரென்று பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக இளம் பெண்ணிடம் தனியாக பேச வேண்டும் என்று கூறி வாலிபர் அவரை மோட்டார் சைக்கிளில் வட்டமலை பாளையம் காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அங்கு இருவருக்கும் வாக்குவாதம் முற்றியதால் அந்த இளம் பெண்ணை கட்டையால் பலமாக அந்த பெண்ணின் தலையில் தாக்கி கொலை செய்துள்ளார்.
அதுமட்டுமின்றி அடையாளம் தெரியாமல் இருக்க அவரது மோட்டார் சைக்கிளில் இருந்த பெட்ரோல் எடுத்து இறந்த அந்த பெண்ணின் உடலில் ஊற்றி தீ வைத்து விட்டு சென்றுள்ளார்.
இதைத்தொடர்ந்து அந்த வாலிபரை போலீசார் மடக்கிப் பிடித்தனர். அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
இடைத்தொடர்ந்து அந்த வாலிபரை போலீசார் மடக்கிப் பிடித்தனர். அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.


Idhula yar mela thapu ???kalla kadhaluku sattam enna punishment….murder ku enna punishment???case mudiya target time evlo??
Kalla kathalukku sattam punishment tharathanala tha ipdi nadakuthu.. Ithuku kalam tha pathil sollum.