கோவை: கோவையில் முரசொலி நாளிதழில் பணியாற்றி வந்த நிருபர் பிலால் உயிரிழந்த சம்பவம் சக பத்திரிகையாளர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கரும்புக்கடை சாரமேடு பகுதியைச் சேர்ந்தவர் பிலால். இவர் முரசொலி பத்திரிகையில் நிருபராகவும், நம் நியூஸ் என்ற சேனல் நிர்வாகியாகவும் பணியாற்றி வந்தார்.
நேற்று வழக்கம்போல் பணி முடிந்து வீடு சென்றார் பிலால். இதனிடையே அவருக்கு இன்று திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதில் பிலால் பரிதாபமாக உயிரிழந்தார்.
அவரது மறைவுக்கு சக பத்திரிகையாளர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. பிலால் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.