கோவையில் 250 ரூபாய்க்காக ஜெயிலுக்குச் சென்ற வாலிபர்!

கோவை: கோவையில் சாலையில் நின்றிருந்த இளைஞரிடம் வழிப்பறி செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

கோவைப்புதூர் எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் கவுதம்(26). தனியார் நிறுவன ஊழியர். இவர் நேற்று சுகுணாபுரம் செந்தமிழ் நகர் பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்தார்.

அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் கவுதமிடம் பணம் தருமாறு கேட்டார். அவர் கொடுக்க மறுத்ததால், ஆத்திரமடைந்த அந்த வாலிபர் கத்தியைக் காட்டி மிரட்டி கவுதமிடம் இருந்த ரூ. 250ஐ பறித்துத் தப்பி சென்றார்.

இது குறித்து கவுதம் குனியமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

அதில், பணம் பறித்தது குனியமுத்தூர் இடையர்பாளையம் பிரிவு மணிகண்டன் நகரை சேர்ந்த சுமேஷ்(29) என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்தனர்.

Dev Mithran
Dev Mithran
Dev Mithran has 3 years of experience in the media field and is currently working as a content writer for News Clouds Coimbatore. He covers a wide range of beats including crime, politics, and lifestyle, bringing accurate, engaging, and audience-focused reporting to digital news.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

போத்தனூரில் சிறுத்தையா? வைரலாகும் வீடியோ… வனத்துறை கூறுவது என்ன?

கோவை போத்தனூரில் சிறுத்தை நடமாட்டம் என வைரலான வீடியோ குறித்து வனத்துறை விளக்கம் அளித்துள்ளது. அது சிறுத்தை அல்ல, காட்டு பூனை என அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

Video

போத்தனூரில் சிறுத்தையா? வைரலாகும் வீடியோ… வனத்துறை கூறுவது என்ன?

கோவை போத்தனூரில் சிறுத்தை நடமாட்டம் என வைரலான வீடியோ குறித்து வனத்துறை விளக்கம் அளித்துள்ளது. அது சிறுத்தை அல்ல, காட்டு பூனை என அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.