கோவை: கோவையில் காதல் டர்ச்சர்ணை காதல் டார்ச்சர் செய்த வாலிபர் மீது பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.
கோவையைச் சேர்ந்த 23 வயது இளம் பெண் டாடாபாத்தில் உள்ள நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் கோவையில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் ஆர்க்கிடெக்சர் பட்டப்படிப்பு படித்தார்.
அப்போது அதே பல்கலைக்கழகத்தில் இன்டீரியர் டிசைனிங் துறையில் குமார் (பெயர் மாற்றம்) என்ற வாலிபர் படித்து வந்தார். இருவரும் ஒரே நிறுவனத்தில் படித்ததால் பழகியுள்ளனர்.
அப்போதே குமார், இளம்பெண்ணை காதலிப்பதாக கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் அதை ஏற்க மறுத்துள்ளார். ஆனாலும் தொடர்ந்து குமார் அவரை காதலிப்பதாக கூறியதால் இளம்பெண் பல்கலைக்கழக டீன் அலுவலகத்தில் புகார் செய்தார்.
அதன்பிறகு இளம்பெண் அளித்த புகாரின் பேரில் குமார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. அவரை வகுப்புக்கு வர தடை விதித்து, தேர்வு எழுத மட்டுமே அனுமதிக்கப்பட்டார்.
இதை தொடர்ந்து 2025ம் ஆண்டு வரை குமார், இளம்பெண்ணை தொந்தரவு செய்யாமல் இருந்துள்ளார்.
இதற்கிடையே பட்டப்படிப்பு படித்து முடித்ததும் டாடாபாத் நிறுவனத்தில் இளம்பெண் வேலைக்கு சேர்ந்து உள்ளதை அறிந்த குமார் மீண்டும் அவரை தொடர்பு கொண்டு காதல் தொல்லை கொடுத்து உள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த இளம் பெண் தனது, செல்போன் எண் மற்றும் சமூக வலைதள பக்க ஐ.டி. முகவரி அனைத்தையும் மாற்றியுள்ளார்.
ஆனாலும் நண்பர்கள் உதவியுடன் குமார் இளம்பெண்ணின் புதிய செல்போன் நம்பர் மற்றும் இன்ஸ்டாகிராம் முகவரியை தெரிந்து கொண்டு மீண்டும் தொடர்பு கொண்டு உள்ளார்.
அதோடு அவரது இன்ஸ்டாகிராமிற்கு மெசேஜ் அனுப்பு டார்ச்சர் செய்து வந்தார்.
இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த இளம் பெண் கடந்த 7ம் தேதி இதுகுறித்து கோவை வெரைட்டி ஹால் ரோடு போலீசில் புகார் செய்தார்.
இதைத்தொடர்ந்து போலீசார் குமார் மீது பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

