கோவையில் நீச்சல் பழக சென்ற சிறுவனுக்கு நேர்ந்த சோகம்…

கோவை: கோவை அருகே நீச்சல் பழக சென்ற 15 வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கோவை மதுக்கரை மலைச்சாமி கோயில் விதியை சேர்ந்தவர் அறிவழகன். இவரது மகன் சிவசங்கர் (வயது15). சிவசங்கர் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெறதாதால், படிப்பை நிறுத்திவிட்டு வீட்டில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் சிவசங்கர் சக நண்பர்கள் நான்கு பேருடன் பாலத்துறை அருகே உள்ள பயன்பாடு முடிந்த அரசுக்கு சொந்தமான கல்லுக்குழியில் தேங்கிய நீரில் நீச்சல் பழக சென்றுள்ளனர்.

அப்போது அந்த நீரில் இறங்கி ஒரு பாறையை தொட்டுவிட்டு திரும்பும் போது பாதுகாப்புக்காக கையில் வைத்திருந்த தெர்மாகோல் நழுவியுள்ளது. அதில் சிவசங்கர் நீரில் மூழ்கி உயிரிழந்தார். இதையடுத்து தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் கல்லுக்குழியில் இறங்கி நீரில் மூழ்கிய சிவசங்கரன் உடலை மீட்டனர்.

தொடர்ந்து மதுக்கரை போலிசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் சிவசங்கரின் உறவினர்கள் நண்பர்கள் மற்றும் ஊர் மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

SNS கல்லூரியில் மாணவர்கள் உயிருடன் விளையாட்டு!

கோவை சரவணம்பட்டியில் கல்லூரி வளாகத்தில் மாணவர்கள் வாகன சாகசத்தில் ஈடுபட்ட போது கட்டுப்பாட்டை இழந்த கார் மோதியதில் இரண்டு மாணவிகள் உயிர் தப்பினர்.

Video