கோவை மாநகராட்சியில் 1.05 கோடி மதிப்பில் வளர்ச்சி பணிகள் தொடக்கம்…!

கோவை: கோவையில் 1.05 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்ட பணிகளை மாநகராட்சி மேயர் தொடங்கி வைத்துள்ளார்.

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் ரூ.1.05 கோடி மதிப்பீட்டிலான பல்வேறு வளர்ச்சித்திட்டப் பணிகளை மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் துவக்கி வைத்து பணிகளை விரைவாகவும், தரமாகவும் செய்து முடிக்க சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தி உள்ளார்.

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட வடக்கு, கிழக்கு,மேற்கு, தெற்கு மற்றும் மத்தியம் என ஐந்து மண்டலங்களுக்குட்ட பகுதிகளில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் தொடர்ந்து, மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அந்தவகையில், கோயம்புத்தூர் மாநகராட்சி, வடக்கு மண்டலம், வார்டு எண்.29-க்குட்பட்ட கணபதி புதூர் முதல் வீதியில் மாநகராட்சி பொது நிதியின்கீழ் ரூ.28.00 இலட்சம் மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் மற்றும் சிறுபாலம் அமைக்கும் பணியினையும், கணபதி மோர் மார்க்கெட் பகுதியில் மாநகராட்சி பொது நிதியின்கீழ் ரூ.40.00 இலட்சம் மதிப்பீட்டில் நகர்ப்புற நலவாழ்வு மையத்தில் ஆய்வகம் மற்றும் சுற்றுச்சுவர் அமைக்கும் பணியினையும்,

கட்டபொம்மன் வீதி, காந்தி நகர் பகுதியில் மாநகராட்சி பொது நிதியின்கீழ் ரூ.7.50 இலட்சம் மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் மற்றும் சிறுபாலம் அமைக்கும் பணியினையும், மீனாட்சி நகர் பகுதியில் உள்ள மாநகராட்சி சிறுவர் பூங்கா மற்றும் பூம்புகார் நகர் பகுதியில் மழைநீர் வடிகால் அமைப்பினை மாநகராட்சி பொது நிதியின்கீழ் ரூ.10.00 இலட்சம் மதிப்பீட்டில் பராமரிக்கும் பணியினையும்,

கணபதி, குமரன் நகர், கொரத்தோட்டம். வி.என். நகர் ஆகிய பகுதிகளில் மாநகராட்சி பொது நிதியின்கீழ் ரூ.20.00 இலட்சம் மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் மற்றும் சிறுபாலம் அமைக்கும் பணியினையும் என மொத்தம் ரூ.1.05 கோடி மதிப்பீட்டிலான வளர்ச்சித்திட்டப் பணிகளை மாநகராட்சி மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன், துவக்கி வைத்து, பணியினை விரைவாகவும், தரமாகவும் செய்து முடிக்க சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இந்நிகழ்வின்போது, உதவி பொறியாளர் சக்திவேல் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

சிங்காநல்லூர் ரயில் நிலையத்தில் இந்தி மொழி அழிப்பு- போலிசார் விசாரணை…

கோவை: சிங்காநல்லூர் ரயில் நிலையத்தில் அறிவிப்பு பலகையில் இருந்த இந்தி மொழி கருப்பு மைக் கொண்டு அழிக்கப்பட்டுள்ளது. அண்மைக்காலமாக இந்தி மொழி திணிப்பிற்கு பல்வேறு திராவிட கட்சிகளும் இந்தி திணிப்பு எதிர்ப்பாளர்களும் கடும் கண்டனத்தை...

Video

கோவையில் காரை கரப்பான் பூச்சி போல் கவிழ்த்துவிட்டு மட்டை – வீடியோ

கோவை அருகே தாறுமாறாக வந்த கார் சாலையோரத்தில் கவிழ்ந்த நிலையில், போதையில் இருந்த டிரைவர் அங்கேயே படுத்து உறங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.