20ம் தேதி தவறாமல் இதனை கடைபிடிக்க வேண்டும்- கோவை ஆட்சியர் உத்தரவு…

கோவை: 20ம் தேதி தவறாமல் உலகத் தாய்மொழி தினத்தை கடைபிடிக்க கோவை ஆட்சியர் பவன்குமார் அறிவுறுத்தியுள்ளார்.

2025ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் பிப்ரவரி 21 உலகத் தாய்மொழி நாளன்று அரசு அலுவலகங்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் அனைத்திலும் உலகத் தாய்மொழிநாள் உறுதிமொழி ஏற்குமாறு அரசு ஆணையிட்டுள்ளது.

அதனடிப்படையில், 2026 பிப்ரவரி 21ஆம் நாளன்று தாய்மொழி நாள் கொண்டாடப்படவுள்ளதையடுத்து 21ம் தேதி சனிக்கிழமை அரசு விடுமுறை என்பதால் 20ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று தாய்மொழி தினத்தைக் கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள அரசு அலுவலகங்களில் பணிபுரியும் அலுவலர்கள், பணியாளர்கள் அனைவரும் மாவட்ட ஆட்சியரகத்தில் ஒன்று கூடி மாவட்ட ஆட்சியர் தலைமையில் உறுதிமொழி ஏற்கவும் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள அரசு அலுவலர்கள், பணியாளர்கள், பேராசிரியர்கள், ஆசிரியர்கள் அனைவரும் அதேநாளில் அவரவர் அலுவலகங்களிலும் கல்லூரிகள் / பள்ளிகளில் மாணவர்கள் முன்னிலையிலும் தவிறாமல் உறுதிமொழி ஏற்குமாறும் மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் அறிவுறுத்தியுள்ளார்.

மக்களும் தாய்மொழி தினத்தில் தங்கள் தாய்மொழியின் பெருமைகளை உலகறியச் செய்யும் நற்செயல்களில் ஈடுபடலாம்.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

ஆண்டின் முதல் சந்திர கிரகணம் 2026: என்ன செய்யலாம்? என்ன கூடாது?

மார்ச் 3ம் தேதி நடைபெறும் ஆண்டின் முதல் சந்திர கிரகணம் மற்றும் ரத்த நிலவு பற்றிய முழு தகவல்கள். கிரகண நேரம், பார்க்கலாமா?, என்ன செய்யலாம்? தெரிந்துகொள்ளுங்கள்.

Video

போத்தனூரில் சிறுத்தையா? வைரலாகும் வீடியோ… வனத்துறை கூறுவது என்ன?

கோவை போத்தனூரில் சிறுத்தை நடமாட்டம் என வைரலான வீடியோ குறித்து வனத்துறை விளக்கம் அளித்துள்ளது. அது சிறுத்தை அல்ல, காட்டு பூனை என அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.