Coimbatore Power Cut: மத்தம்பாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 13.01.2026 (செவ்வாய்க்கிழமை) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் மேற்கொள்ளப்பட உள்ள பராமரிப்பு பணிகள் காரணமாக, கோவை மாத்தம்பாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நாளை (13 ஜனவரி 2026) மின்சாரம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, பின்வரும் பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும்.
Coimabtore Power Cut:
பெத்தாபுரம், தண்ணீர்பந்தல், கோட்டைபிரிவு, ஒன்னிபாளையம் ரோடு, அறிவொளி நகர், சின்ன மத்தம்பாளையம், மத்தம்பாளையம், செல்வபுரம், சாந்திமேடு, பாரதி நகர், சமணநாயக்கன்பாளையம் ரோடு, கண்ணார்பாளையம் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் மின்விநியோகம் நிறுத்தப்படும்.
பராமரிப்பு பணிகள் முடிவடைந்தவுடன், வழக்கம்போல் மின்சாரம் வழங்கப்படும் என மின்வாரியம் தெரிவித்துள்ளது. பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த இடங்கள் தவிர கூடுதலாக சில இடங்களிலும் மின்தடை எற்படலாம்.

