கோவை: கோவை சரகத்தில் 33 இன்ஸ்பெக்டர்களை இடமாற்றம் செய்ய டிஐஜி உத்தரவிட்டுள்ளார்.
கோவை சரகமான கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு மாவட்டங்களில் உள்ள போலீஸ் ஸ்டேஷன்களில் இன்ஸ்பெக்டர்களாக பணிபுரிந்து வரும் 33 பேரை இடமாற்றம் செய்ய டிஐஜி சசிமோகன் உத்தரவிட்டுள்ளார். அதன்படி ஈரோடு மோடகுறிச்சி இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மேட்டுப்பாளையம் போலீஸ் ஸ்டேஷனுக்கும், கேஜி சாவடி இன்ஸ்பெக்டர் சண்முகம் நீலகிரி எருமாடு போலீஸ் ஸ்டேஷனுக்கும், எருமாடு இன்ஸ்பெக்டர் நந்தகுமார் கேஜி சாவடி போலீஸ் ஸ்டேஷனுக்கும், ஊட்டி டவுன் இன்ஸ்பெக்டர் தாமோதரன் ஈரோடு மோடகுறிச்சி போலீஸ் ஸ்டேஷனுக்கும், ஈரோடு டவுன் இன்ஸ்பெக்டர் அனுராதா ஊட்டி டவுன் போலீஸ் ஸ்டேஷனுக்கும், மேட்டுப்பாளையம் இன்ஸ்பெக்டர் சின்ன கமனன் ஈரோடு வடக்கு போலீஸ் ஸ்டேஷனுக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.
ஈரோடு வடக்கு இன்ஸ்பெக்டர் செந்தில் பிரபு கோத்தகிரி போலீஸ் ஸ்டேஷனுக்கும், கோத்தகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜீவானந்தம் திருப்பூர் மாநகர குற்றப்பிரிவு போலீஸ் ஸ்டேஷனுக்கும், பெருந்துறை அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி ஈரோடு டவுன் இன்ஸ்பெக்டராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அவிநாசி அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் சாந்தி பெருந்துறை அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனுக்கும், கோவை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் அமுதா அவிநாசி அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனுக்கும், ஈரோடு சித்தோடு இன்ஸ்பெக்டர் அமிர்தலிங்கம் ஈரோடு கடத்தூர் போலீஸ் ஸ்டேஷனுக்கும், திருப்பூர் பெருமாநல்லூர் இன்ஸ்பெக்டர் விநாயகம் ஈரோடு சித்தோடு போலீஸ் ஸ்டேஷனுக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.
ஈரோடு கொடுமுடி இன்ஸ்பெக்டர் சரவணன் திருப்பூர் பெருமாநல்லூர் போலீஸ் ஸ்டேஷனுக்கும், ஈரோடு கஞ்சிகோல் இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் கொடுமுடி போலீஸ் ஸ்டேஷனுக்கும், திருப்பூர் மாவட்ட குற்றப்பதிவேடு பாதுகாப்பு இன்ஸ்பெக்டர் கலையரசி ஈரோடு கஞ்சிகோல் போலீஸ் ஸ்டேஷனுக்கும், ஈரோடு தெற்கு இன்ஸ்பெக்டர் வைரம் நீலிகிரி மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் ஸ்டேஷனுக்கும், நீலிகிரி மாவட்ட சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் சத்யா திருப்பூர் மாவட்ட குற்றப்பதிவேடு பாதுகாப்பு இன்ஸ்பெக்டராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கோவை பீளமேடு இன்ஸ்பெக்டர் அர்ஜூன் குமார் ஈரோடு தெற்கு போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டராகவும், ஈரோடு கடத்தூர் இன்ஸ்பெக்டர் அரவிந்த ராஜன், கோபி போலீஸ் ஸ்டேஷனுக்கும், கோபி இன்ஸ்பெக்டர் தமிழரசு திருப்பூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு இன்ஸ்பெக்டராகவும், கோவை மாநகர குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் வெங்கடேஷன் ஈரோடு ஹாசனுர் போலீஸ் ஸ்டேஷனுக்கும், கோவை ஆர் எஸ் புரம் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி ஈரோடு அம்மாபேட்டை போலீஸ் ஸ்டேஷனுக்கும், கோவை பெரியநாயக்கன்பாளையம் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் இந்திரை சோப்பியா ஈரோடு அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனுக்கும், ஊட்டி மாவட்ட அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் பழனியம்மாள் பெரியநாயக்கன்பாளையம் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனுக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.
கோவை மாநகர போத்தனூர் இன்ஸ்பெக்டர் அன்புமணி ஊட்டி மாவட்ட அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனுக்கும், கோவை கட்டுப்பாட்டு அறை இன்ஸ்பெக்டர்கள் நந்தகுமார் நீலகிரி சோலார்மட்டம் போலீஸ் ஸ்டேஷனுக்கும், சுகவானம் கோவை அன்னூர் போலீஸ் ஸ்டேஷனுக்கும், ஈரோடு அம்மாபேட்டை இன்ஸ்பெக்டர் கவிதா ஊட்டி புறநகர் வட்டம் போலீஸ் ஸ்டேஷனுக்கும், அன்னூர் இன்ஸ்பெக்டர் செல்வம் கிணத்துக்கடவு போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல உடுமலை போக்குவரத்து பிரிவு இன்ஸ்பெக்டர் மகேஸ்வரன், கோத்தகிரி போக்குவரத்து இன்ஸ்பெக்டராகவும், கோத்தகிரி போக்குவரத்து இன்ஸ்பெக்டர் முருகன் ஆயுதப்படைக்கும், திருப்பூர் கொங்கு நகர் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் முருகேஷன் ஈரோடு தெற்கு போக்குவரத்து இன்ஸ்பெக்டராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

