Header Top Ad
Header Top Ad

கோவை செம்மொழிப் பூங்கா: 70% தயார்… என்னென்ன அம்சங்கள்?

கோவை: கோவை செம்மொழிப் பூங்கா கட்டுமானப் பணிகள் 75% நிறைவடைந்துள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இந்த பூங்கா, காந்திபுரம் மத்திய சிறைச்சாலை அருகே 165 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்படுகிறது.

கோவையில் கடந்த 2010ம் ஆண்டு உலகத் தமிழ் செம்மொழி மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் அன்றைய, முதல்வர் கருணாநிதி செம்மொழி பூங்கா திட்டத்தை அறிவித்தார்.

தொடர்ந்து, கடந்த 2011 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று அ.தி.மு.க ஆட்சி அமைத்தது. இதனால் கோவையில் செம்மொழிப்பூங்கா திட்டம் கிடப்பில்போடப்பட்டது. தொடர்ந்து, 2021ல் தி.மு.க மீண்டும் ஆட்சியமைத்தபின், இத்திட்டம் கையில் எடுக்கப்பட்டது.

Advertisement

அதன்படி, காந்திபுரம் மத்திய சிறைச்சாலை அருகே, 45 ஏக்கர் பரப்பளவில் ரூ.167.25 கோடி மதிப்பீட்டில் செம்மொழிப் பூங்கா கட்டுமானப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

தற்போது இந்த பூங்காவின் 75 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முக்கிய அம்சமாக இப்பூங்காவில் 22 வகையான தோட்டங்கள் இடம்பெறுகின்றன. அதில்,

  • செம்மொழி வனம்
  • மகரந்த வனம்
  • மூலிகை வனம்
  • நீர் வனம்
  • நட்சத்திர வனம்
  • நலம் தரும் வனம்
  • நறுமண வனம்

போன்ற தோட்டங்கள் அடங்கும்.

பூங்காவில் 17,000 சதுர மீட்டர் பரப்பளவில், ரூ.7 கோடி மதிப்பீட்டில் வாகன நிறுத்துமிடமும் உருவாக்கப்படுகிறது. இதில், 380 கார்கள் 10 பேருந்துகளை பார்க் செய்ய முடியும்,

பூங்காவில் செடிகளுக்கு தேவையான நீரை, 6 கி.மீ. தொலைவில் உள்ள உக்கடம் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து குழாய் மூலம் கொண்டு வரப்பட உள்ளது. நிலத்தடி நீர்த்தேக்க தொட்டி, மழைநீர் சேகரிப்பு, மின்சாரம் மற்றும் தகவல் தொடர்பு பணிகள் 30% முடிவடைந்துள்ளன.

  • திறந்தவெளி அரங்கம் – 80%
  • நுழைவு வாயில் – 80%
  • சுற்றுச்சுவர் – 95%
  • கழிப்பறைகள் (3) – 80%
  • உணவகம் – 60%
  • விற்பனை நிலையங்கள் – 60%

மேலும், ஆடியோ, வீடியோ அமைப்புகளுக்குத் தேவையான உபகரணங்களும் வாங்கப்பட உள்ளன.

மாநகராட்சி தகவலின்படி, செம்மொழி பூங்கா வரும் ஜூன் மாதம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட உள்ளது.

பூங்காவுக்கான நுழைவுக்கட்டணம் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன:-

பெரியவர்களுக்கு – ₹25
சிறியவர்களுக்கு – ₹10
நடைப்பயிற்சி மாத கட்டணம் – ₹100
கேமரா – ₹25
வீடியோ கேமரா – ₹150
திரைப்பட படப்பிடிப்பு (ஒரு நாள்) – ₹50,000

இந்த பூங்கா கோவைக்கு சிறந்த பொழுதுபோக்கு இடமாக இருக்கும் என்றும, மாநகருக்கு வளர்ச்சியை சேர்க்கும் வரும் என்று பொதுமக்கள் உற்சாகம் தெரிவித்து வருகின்றனர்.

Recent News

Latest Articles