Coimbatore Special Train | கோவை வழியாக சிறப்பு ரயில் அறிவிப்பு!

Coimbatore Special Train: ஹோலி பண்டிகையை முன்னிட்டு கோவையில் இருந்து பீகார் வரை சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

கோவையில் வடமாநில மக்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர். இதனிடையே எதிர்வரும் ஹோலி பண்டிகையை முன்னிட்டு, பயணிகள் அதிகரிப்பை கருத்தில் கொண்டு தென்னகர ரயில்வே சார்பில் கோவை போத்தனூரில் இருந்து பீகார் பிராணி சந்திப்பு வரை சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ரயிலானது (Train No.06021) மார்ச் 2 மற்றும் 9 ஆகிய திங்கட்கிழமைகளில் அதிகாலை 4.30 மணிக்கு போத்தனூர் சந்திபில் இருந்து புறப்பட்டு, புதன்கிழமை மதியம் 2 மணிக்கு பீகார் மாநிலம் பிராணி சென்றடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வண்டி எண் 06022, பிராணி சந்திப்பில் இருந்து புறப்பட்டு, மார்ச் 5 மற்றும் 12 ஆகிய வியாழக்கிழமைகளில் மதியம் 1.15 மணிக்கு புறப்பட்டு, சனிக்கிழமை இரவு 11.30 மணிக்கு போத்தனூர் சந்திப்பை. மொத்தம் 2 சேவைகள் வழங்கப்பட உள்ளன.

Sleeper Class – 18 பெட்டிகள்
General Second Class – 2 பெட்டிகள்
மாற்றுத்திறனாளிகள் வசதியுடன் கூடிய Luggage-cum-Brake Van – 2 பெட்டிகள்

திருப்பூர் (Tiruppur)
ஈரோடு (Erode)
சேலம் (Salem)
ஜோலார்பேட்டை (Jolarpettai)
காட்பாடி (Katpadi)
பெரம்பூர் (Perambur)
கூடூர் (Gudur)
நெல்லூர் (Nellore)
விஜயவாடா (Vijayawada)
சந்திரபூர் (Chandrapur)
நாக்பூர் (Nagpur)
இதார்சி (Itarsi)
ஜபல்பூர் (Jabalpur)
பிரயாக்ராஜ் சியோகி (Prayagraj Chheoki)
ஷாஹ்பூர் படோரி (Shahpur Patoree)
ஆகிய இடங்களில் இந்த ரயில் நின்று செல்லும்.

சேலம் கோட்ட ரயில் நிலையங்களில் இந்த ரயில் நின்று செல்லும் நேர விவரங்கள் பின்வருமாறு:-

Train No.06021 (திங்கட்கிழமை)

திருப்பூர் – 05.23 / 05.25 மணி
ஈரோடு – 06.15 / 06.20 மணி
சேலம் – 07.12 / 07.15 மணி
ஜோலார்பேட்டை – 09.20 / 09.25 மணி

Train No.06022 (சனிக்கிழமை)

ஜோலார்பேட்டை – 17.00 / 17.05 மணி
சேலம் – 18.45 / 18.48 மணி
ஈரோடு – 20.00 / 20.05 மணி
திருப்பூர் – 20.43 / 20.45 மணி

இந்த சிறப்பு ரயில் சேவைகள் ஹோலி பண்டிகை காலத்தில் வட இந்தியாவிற்கு பயணம் செய்யும் கோவை மற்றும் சுற்றுப்புற பகுதி பயணிகளுக்கு உதவியாக இருக்கும் என்ற அடிப்படையில் இயக்கப்பட உள்ள்து என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

போத்தனூரில் சிறுத்தையா? வைரலாகும் வீடியோ… வனத்துறை கூறுவது என்ன?

கோவை போத்தனூரில் சிறுத்தை நடமாட்டம் என வைரலான வீடியோ குறித்து வனத்துறை விளக்கம் அளித்துள்ளது. அது சிறுத்தை அல்ல, காட்டு பூனை என அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

Video

போத்தனூரில் சிறுத்தையா? வைரலாகும் வீடியோ… வனத்துறை கூறுவது என்ன?

கோவை போத்தனூரில் சிறுத்தை நடமாட்டம் என வைரலான வீடியோ குறித்து வனத்துறை விளக்கம் அளித்துள்ளது. அது சிறுத்தை அல்ல, காட்டு பூனை என அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.