Coimbatore weather: கோவையில் இந்த வார வானிலை நிலவரத்தை சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் இன்று (Sep-2) முதல் செப்டம்பர் 4ம் தேதி வரை ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
இந்த மூன்று நாட்களும் குறைந்தது 23 டிகிரி செல்சியஸ் முதல், அதிகபட்சம் 33 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.
செப்டம்பர் 5ம் தேதி முதல், 7ம் தேதி வரை கோவையில் மழைக்கு வாய்ப்பில்லை என்றும், இந்த நாட்களில் குறைந்தது 23 டிகிரி செல்சியஸ் முதல், அதிகபட்சம் 33 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் கணித்துள்ளது.
வானிலை மையத்தின் கணிப்புகள் மாறுதலுக்கு உட்பட்டது. புதிய வானிலை அறிவிப்புகள் வெளியாகையில் நமது தளத்தில் அவை வெளியிடப்படும். இணைந்திருங்கள் வாசகர்களே
கோவை செய்திகள், அரசு, ரயில்வே மற்றும் மின்தடை அறிவிப்புகளுக்கு எங்கள் வாட்ஸ்-ஆப் குழுவில் இணைவீர் 👈