Coimbatore weather: இந்த கோடைக்காலம் தொடங்கியது முதல் இல்லாத வகையிலான வெப்ப அளவை கோவை மாவட்டம் இந்த வாரம் சந்திக்க உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
கோவையில் இந்த வார வானிலை நிலவரம் குறித்த கணிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
ஒவ்வொரு நாளுக்கான வானிலை முன்னறிவிப்பை இங்கே காணலாம்.

மார்ச் 2 (திங்கட்கிழமை)
கோவையில் இன்று வானம் பகுதியளவில் மேகமூட்டம். இரவு நேரத்தில் பனிமூட்டம் நிலவும் சாத்தியங்கள் உள்ளன. இன்று குறைந்தபட்சம் 21°C முதல், அதிகபட்சம் 35°C வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளது.
மார்ச் 3 (செவ்வாய்)
கோவையில் இந்த கோடை தொடங்கியது முதல் அதிகபட்சமாக 35°C வரை வெப்பம் பதிவாகி வந்த நிலையில், நாளை இதுவரை இல்லாத உச்சமாக 36°C வெப்பம் (97 டிகிரி ஃபாரன்ஹீட்) பதிவாக உள்ளதாக வானிலை மையம் கணித்துள்ளது. குறைந்தபட்சம் 21°C வரை வெப்பம் பதிவாகலாம்.
மார்ச் 4 (புதன்)
புதனன்று வெப்பநிலை மீண்டும் சற்று குறையும். அதிகபட்சம் 35°C முதல் குறைந்தபட்சம் 21°C வரை வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளது. மழைக்கு வாய்ப்பு இல்லை.
மார்ச் 5 (வியாழன்)
வானம் பகுதியளவில் மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்சம் 35°C முதல், குறைந்தபட்சம் 21°C வரை வெப்பம் பதிவாகலாம்.
மார்ச் 6 (வெள்ளி)
கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மீண்டும் வெப்பம் அதிகரிக்கும். அதிகபட்சம் 36°C வரை வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
மார்ச் 7 (சனி)
சனிக்கிழமையன்றும் அதிகபட்ச வெப்பமாக 36°C பதிவாக வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. அதாவது 97 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாக உள்ளது. இந்த நாளில் குறைந்தபட்சம் 21°C வெப்பம் பதிவாக வாய்ப்பு உள்ளது.
இந்த வாரம் கோவையில் மழைக்கான வாய்ப்பும் இல்லை என்று வானிலை மையம் அறிவித்துள்ளது. வானிலை மையத்தின் கணிப்புகள் மாற்றத்திற்கு உட்பட்டவை; அப்படி மாறுதல்களுடன் கூடிய அறிக்கையை வானிலை மையம் கொடுக்கும்போது, நியூஸ் க்ளவுட்ஸ் கோயம்புத்தூர் தளத்தில் அப்டேட் செய்யப்படும்.

இந்த சூடான செய்தியை உங்கள் பகுதி பெற்றோர்களுக்கும், முதியவர்களுக்கும் பகிர்ந்து உதவிடுங்கள்.
கோவை மாவட்டத்தில் இந்த வாரம் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் நிலையில், பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள கேட்டுக் கொள்கிறோம் மக்களே…

