Coimbatore weather report: கோவையில் அடுத்த 6 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
கோவையில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், இந்த வாரம் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. அதன்படி, ஒவ்வொரு நாளுக்கான வானிலை முன்னறிவிப்பை இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்.
பிப்ரவரி 21
கோவையில் இன்று (பிப்ரவரி 21) பகுதி மேகமூட்டத்துடன் வானிலை நிலவுவதுடன், ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. பகலில் அதிகபட்சமாக 33°C வரை வெப்பநிலையும், குறைந்தபட்சமாக 22°C வரை வெப்பநிலையும் பதிவாகும் என கணிக்கப்பட்டுள்ளது.
பிப்ரவரி 22
வானம் பகுதி மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை பகலில் அதிகபட்சமாக 33°C வரை வெப்பநிலையும், குறைந்தபட்சமாக 22°C வரை வெப்பநிலையும் பதிவாக வாய்ப்புள்ளது.
பிப்ரவரி 23
கோவையில் திங்கட்கிழமை லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மேகமூட்டத்துடன் வானிலை நிலவும்.
மற்ற தினங்களைக் காட்டிலும், 23ம் தேதி வெப்பம் அதிகரிக்கும். அன்றைய தினம் பகலில் அதிகபட்சமாக 34°C வரை வெப்பம் பதிவாகலாம். இதேபோல் குறைந்தபட்சமாக 22°C வரை வெப்பநிலையும் பதிவாகும் என கணிக்கப்பட்டுள்ளது.
பிப்ரவரி 24
கோவையில் (பிப்ரவரி 24) பகுதி மேகமூட்டத்துடன் வானிலை நிலவுவதுடன், லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அன்று பகலில் அதிகபட்சமாக 34°C வரை வெப்பநிலையும், குறைந்தபட்சமாக 22°C வரை வெப்பநிலையும் பதிவாக வாய்ப்பு உள்ளது.
பிப்ரவரி 25
புதன்கிழமை பகுதி மேகமூட்டத்துடன் வானிலை நிலவுவதுடன், லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பகலில் அதிகபட்சமாக 34°C வரை வெப்பநிலையும், குறைந்தபட்சமாக 22°C வரை வெப்பநிலையும் பதிவாகும் என கணிக்கப்பட்டுள்ளது.
பிப்ரவரி 26
கோவையில் (பிப்ரவரி 26) பகுதி மேகமூட்டத்துடன் வானிலை நிலவுவதுடன், லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அன்று பகலில் அதிகபட்சமாக 33°C வரை வெப்பநிலையும், இரவில் குறைந்தபட்சமாக 22°C வரை வெப்பநிலையும் பதிவாகும் என கணிக்கப்பட்டுள்ளது.

