கோவை: இராமநாதபுரம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் ரூ.79.00 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கணினி ஆய்வுக்கூடம் மற்றும் அரங்கம் திறக்கப்பட்டது.
கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலம், வார்டு எண்.3க்குட்பட்ட இராமநாதபுரம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் தனியார் பங்களிப்பு நிதியின் (SREE ANNAPOORNA SRI GOWRISHANKAR HOTELS PVT Ltd) 79.00 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கணினி ஆய்வுக்கூடம் மற்றும் சிறிய அரங்கம் கட்டப்பட்டுள்ளது.
இதனை மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் முன்னிலையில், கோயம்புத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர் கணபதி ராஜ்குமார், மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் ஆகியோர் திறந்து வைத்தனர்.
கோயம்புத்தூர் மாநகராட்சி, மத்திய மண்டலம் வார்டு எண்.3க்குட்பட்ட மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில், 453 மாணவர்கள் மற்றும் 83 மாணவியர்கள் மொத்தம் 536 மாணவமாணவியர்கள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு பல்வேறு கல்வி சார்ந்த செயல்பாடுகள் மாநகராட்சியின் சார்பில் மேற்கொள்ளப்பட்டுவருகிறது.
அந்த வகையில் தனியார் பங்களிப்பு நிதியின் கீழ் (SREE ANNAPOORNA SRI GOWRISHANKAR HOTELS PVT Ltd) ரூ.79.00 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள கணினி ஆய்வுக்கூடம் மற்றும் சிறிய அரங்கம் திறந்து வைக்கப்பட்டது.

