உலக நன்மை வேண்டி கோடி முறைக்கும் மேல் விஷ்ணு ஸஹஸ்ரநாமம்- கோவையில் ஒன்று கூடிய பக்தர்கள்…

கோவை: கோவையில் உலக நன்மை வேண்டி விஷ்ணு ஸஹஸ்ரநாம பாராயணத்தை 2 கோடி முறைக்கும் மேல் ஒன்றாக பாடுகின்றனர்.

கோடி விஷ்ணு நாம பாராயணம் அமைப்பின் சார்பில் ஒவ்வொரு வருடமும் உலக நன்மை வேண்டி கோடி விஷ்ணு நாம பாராயணம் நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது. இதில் அனைத்து மக்களும் கலந்து கொண்டு கோடி அல்லது கோடி முறைக்கும் மேல் விஷ்ணு ஸஹஸ்ரநாம பாராயணத்தை பாடுவர்.

Advertisement

அதன்படி 16வது ஆண்டாக இந்த ஆண்டும் இந்த நிகழ்வானது நடைபெறுகிறது. கோவை தடாகம் சாலை இடையார்பாளையம் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெறும் இந்த நிகழ்வு மாலை வரை நடைபெறுகிறது.

இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்துள்ள ஆயிரக்கணக்கான பக்தர்கள், பொதுமக்கள் ஒன்றாக இணைந்து தொடர்ச்சியாக விஷ்ணு ஸஹஸ்ரநாம பாராயணத்தை பாடி வருகின்றனர். இதில் நேரடியாக வந்து கலந்து கொள்ள முடியாதவர்கள் ஆன்லைன் (Video Call) வாயிலாகவும் கலந்து கொண்டுள்ளனர்.

Recent News