கோவை சிங்காநல்லூர் தொகுதியில் போட்டியிட விருப்பமனு வழங்கிய திமுக நிர்வாகி…

கோவை: கோவை சிங்காநல்லூர் தொகுதியில் திமுக சார்பில் விருப்ப மனு வழங்கினார் மாவட்ட பொறுப்பாளர் செந்தமிழ் செல்வன்.

2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சிகளும் விருப்ப மனு வழங்கி வருகின்றனர். தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் அதனை பெற்று பூர்த்தி செய்து அவற்றை கட்சிகளிடம் கொடுத்து வருகின்றனர். தேர்தல் போட்டி விருப்பத்தையும் போட்டியிட விரும்பும் தொகுதிகளையும் குறிப்பிட்டு அவர்களின் விவரங்கள் பூர்த்தி செய்யப்பட்டு வழங்கப்படுகிறது.

அதன்படி திமுக விருப்ப மனு சென்னையில் உள்ள திமுக கட்சி தலைமை அலுவலகமான அறிவாலயத்தில் வழங்கப்படுகிறது. நாள் தோறும் தேர்தலில் போட்டியிட விரும்புவோர் அவற்றை பெற்று போட்டியிட விரும்பும் தொகுதிகளை குறிப்பிட்டு அவற்றை அளித்து வருகின்றனர்.

அதன்படி கோவை சிங்காநல்லூர் தொகுதியில் போட்டியிடுவதற்கு திமுக மாநகர் மாவட்ட செயலாளர் செந்தமிழ் செல்வன் விருப்ப மனு அளித்தார். இவர் கடந்த ஆண்டு கோவை மாநகர் மாவட்ட செயலாளராக பொறுப்பேற்றார் என்பதும் அதனைத் தொடர்ந்து பல்வேறு திமுக நிகழ்ச்சிகளை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே இந்தத் தொகுதியில் திமுக முன்னாள் மாவட்டச் செயலாளர் நா.கார்த்திக் போட்டியிட்டிருந்தார். கடந்த தேர்தலில் சொற்ப ஓட்டுகளில் அவர் தோல்வியைத் தழுவினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

போத்தனூரில் சிறுத்தையா? வைரலாகும் வீடியோ… வனத்துறை கூறுவது என்ன?

கோவை போத்தனூரில் சிறுத்தை நடமாட்டம் என வைரலான வீடியோ குறித்து வனத்துறை விளக்கம் அளித்துள்ளது. அது சிறுத்தை அல்ல, காட்டு பூனை என அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

Video

போத்தனூரில் சிறுத்தையா? வைரலாகும் வீடியோ… வனத்துறை கூறுவது என்ன?

கோவை போத்தனூரில் சிறுத்தை நடமாட்டம் என வைரலான வீடியோ குறித்து வனத்துறை விளக்கம் அளித்துள்ளது. அது சிறுத்தை அல்ல, காட்டு பூனை என அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.