கோவை: கோவையில் திமுக மேற்கு மண்டல இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்திற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கோவை கருமத்தம்பட்டி கணியூர் சுங்கச்சாவடி அருகே இன்று மாலை சுமார் 5 மணி அளவில் திமுக மேற்கு மண்டல இளைஞர் அணி நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடைபெறுகிறது. திமுக இளைஞரணி செயலாளரும் தமிழக துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் இதில் கலந்துகொண்டு உரையாற்றுகிறார். மேலும் இதில் திமுக முக்கிய நிர்வாகிகள் பலரும் கலந்து கொள்ள உள்ளனர்.
பிரம்மாண்டமாக நடைபெறும் இந்தக் கூட்டத்தில் சுமார் 10,000 மேற்பட்டோர் அமர்வதற்கு இருக்கைகள் வசதி செய்யப்பட்டுள்ளது மேலும் பிரம்மாண்டமான மேடை அமைத்து பொதுமக்கள் வந்து செல்வதற்கு ஐந்திற்கும் மேற்பட்ட நுழைவாயில்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும் கூட்டம் நடைபெறும் பகுதியை சுற்றிலும் தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திமுக இளைஞர் அணி செயலாளராக இருந்த பொழுது முதல் தற்பொழுது வரை எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன.
தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இது போன்ற பிரம்மாண்டமான கூட்டங்கள் திமுக சார்பில் நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

