கோவை: மதுபோதையில் போலீசாரிடம் தகராறில் ஈடுபட்டு தாக்க முயன்ற நபரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோவை டவுன் ஹால் பகுதியில் நேற்று மாலை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த அன்வர் ராஜா என்பவர் மது போதையில் வந்ததாக தெரிகிறது. அப்போது பெண் காவலர்களை அந்த நபர் தகாத வார்த்தையில் திட்டியதாக கூறப்படுகிறது.
அப்போது அந்த போதை ஆசாமியை காவலர் ஒருவர் சமாதானம் செய்து அனுப்ப முயன்ற நிலையில் காவலர்களை பணி செய்ய விடாமல் தகாத வார்த்தையில் பேசி கொலை மிரட்டல் விடுத்த அனவர் ராஜா மீது கோவை உக்கடம் போலீசார் பல்வேறு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.



