கோவை: தேமுதிக வருகையால் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு ஒரு சீட் குறைக்கப்படும் என பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கோவை காளப்பட்டியில் நேற்று மாலை பாஜக தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் பா.ஜ.க முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு உரையாற்றினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் தமிழகம் முழுவதும் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் தெருமுனை பிரச்சாரம் நடத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக வரும் பொழுது ஒரு கூட்டணி கட்சியினரிடையே இணைப்பு இருக்க வேண்டும் , திமுகவின் குறைகளை மக்களிடம் சொல்வதற்காகவும் இதை வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்வதாக தெரிவித்தார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணு உயிரிழந்தது குறித்து பேசிய அவர், பொது வாழ்க்கை வரலாற்றில் துக்க நாள், ஒரு அரசியல் தலைவருக்கான முழு இலக்கணத்துடன் இருப்பவர் அவர் என்றும், ஒரே ஒருமுறை தேர்தலில் போட்டியிட்டு கோவை பாராளுமன்ற தொகுதியில் வெற்றி வாய்ப்பை இழந்தார், அப்போது வெற்றி பெற்ற சி.பி் ராதாகிருஷ்ணன் , நான் ஜெயித்திருந்தாலும் கூட இன்று வேதனைப்படுகிறேன், என்னுடைய வெற்றியை என்னால் கொண்டாட வில்லை என புகழாரமாக தெரிவித்திருந்தார் எக்கூறிய அவர், சட்டமன்ற உறுப்பினராக, நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தது இல்லை எனவும், சுதந்திரப் போராட்ட உறுப்பினராக, மணல் கொள்ளைக்கு எதிராக போராடியவர், மக்களின் அன்பை பெற்றவர் எனவும் தெரிவித்தார். அரசியல் இலக்கணமாக இருந்தவர், அவருக்கு மரியாதை கலந்த அஞ்சலிகளை தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்.
கூட்டணி இடப்பங்கீடு குறித்து தலைவர்கள் பார்த்து கொள்வார்கள் 26, 27 தேதிகளில் பியூஸ் கோயல் வர இருக்கிறார் , தொகுதி இடங்கள் குறித்து பேசுவது எல்லாம் அவர்கள் இலாக்கா என தெரிவித்தார். திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியினர் டெல்லியில் இருந்து வந்து செல்கிறார்கள் . எங்களுக்கு அதிகாரம் வேண்டும் தமிழகத்தில் வேண்டாம் என்கிறார்கள் ஆனால் நாங்கள் அப்படியல்ல , நேர் கோட்டில் பயணித்துக் கொண்டு இருக்கின்றோம் என தெரிவித்தார்.
கூட்டணியில் ஒற்றுமை இல்லை என திருமாவளவன் பேசியிருப்பது குறித்தான கேள்விக்கு பதில் அளித்த அவர், திமுக கூட்டணியில் திருமாவளவனுக்கு ஒரு சீட் குறைக்க போகிறார்கள் என்றும்.
ஆறு சீட்டில் இருப்பவர்களுக்கு ஒரு சீட் குறைத்து ஐந்து சீட் ஆக்கப் போகிறார்கள் என்றும் அவரே அந்த கூட்டணியில் இருந்து வெளியேற போகிறார் என தெரிவித்தார்.
தேமுதிக வந்து இருப்பதால் எல்லா கூட்டணி கட்சியினருக்கும் ஒரு சீட்டு குறைக்க போகின்றனர். திருமாவளவன் சந்தோஷமாக இல்லை என்பதற்காக தேசிய ஜனநாயக கூட்டணியில் யாரும் சந்தோஷமாக இல்லை என சொல்வது சந்தர்ப்பவாதம் என்றார். விஜயை பொறுத்தவரை, தமிழக மக்கள் தெளிவாக இருக்கின்றனர். யார் வரவேண்டும் என முடிவு செய்வார்கள். தே.ஜ.கூட்டணியில் அனுபவம் வாய்ந்தவர்கள் இருக்கின்றார்கள் மக்களின் நாடித்துடிப்பை அறிந்தவர்கள் என்றார். 2026 ஏப்ரலில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மக்கள் ஓட்டு போட போகிறார்கள் என தெரிவித்தார்.
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எல்லோரும் வருவார்கள் என டிடிவி பேசி இருக்கிறார் , ஓபிஎஸ் யும் வருவார் என்ற நம்பிக்கை இருக்கிறது ஓபிஎஸ் விவகாரத்துக்குள் போக விரும்பவில்லை என தெரிவித்தார். எல்லாருக்கும் ஜெயலலிதா ஆட்சியைக் கொண்டு வர வேண்டும் என்ற எண்ணம் இருக்கும், பலமுறை முதல்வராக ஓபிஎஸ் அவர்களை ஜெயலலிதா கொண்டு வந்துள்ளார், ஓபிஎஸ்யை பொறுத்தவரை ஜெயலலிதாவின் ஆட்சி என்பதில் உறுதியாக இருக்கின்றார், ஒற்றைக் கோட்டில் இருக்கும் பொழுது, ஓபிஎஸ்-க்கு பிரச்சனை இருக்காது எனவும் தெரிவித்தார். சசிகலா கட்சி ஆரம்பித்திருக்கிறார் இன்னும் காலம் இருக்கிறது பார்க்கலாம் என தெரிவித்தார்.

