கோவை GH-ல் பெண் தூய்மை பணியாளருக்கு அடி, உதை! தாய்-மகள் மீது வழக்கு!

கோவை: கோவை அரசு மருத்துவமனையில் பெண் தூய்மை பணியாளரை தாக்கிய தாய், மகள் உட்பட 3 பெண்கள் மீது போலீசார் வழக்குபதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement

கோவை சிங்காநல்லூரை சேர்ந்தவர் அமுதா (35). இவர் மாநகராட்சியில் தூய்மை பணியாளராக வேலை செய்து வருகிறார்.

இவர் தன்னுடன் பணிபுரிந்து வரும் கார்த்திக் என்பவருடன் நட்பாக பழகி வந்துள்ளார். இது கார்த்திக்கின் தங்கை, மனைவி மற்றும் மாமியார் ஆகியோருக்கு பிடிக்கவில்லை.

Advertisement

இதனால் அவர்கள் அடிக்கடி அமுதாவிடம் தகராறில் ஈடுபட்டு வந்தனர். மேலும் கார்த்திக் உடனான பழக்கத்தை கைவிடுமாறு கண்டித்துள்ளனர்.

இந்த நிலையில் அமுதா உடல் நிலை சரியில்லாமல் கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த மூன்று பெண்களும் அமுதாவை தடுத்து நிறுத்தி திடீரென தகராறில் ஈடுபட்டனர்.

வாக்குவதாம் அதிகரிக்கவே அமுதா மீது தாக்குதல் நடத்தினர். இதுகுறித்து அமுதா ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் 3 பெண்கள் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Recent News

நவம்பர் 1ம் தேதி முதல் வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்- இ- பாஸ் பதிவு செய்ய லிங்க் இதோ..

கோவை: நவம்பர் 1 ஆம் தேதியிலிருந்து வால்பாறைக்கு செல்ல இ-பாஸ் பெற்று பயணம் செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தி உள்ளார். சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி, கோயம்புத்தூர் மாவட்டம், வால்பாறைக்கு வருகின்ற...

Video

மருதமலையில் விமர்சையாக நடைபெற்ற சூரசம்ஹாரம்

கோவை: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹாரம் வெகு விமர்சியாக நடைபெற்றது. கந்தர் சஷ்டி விழாவில் முக்கிய நிகழ்வான முருகன் சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்காரம் நிகழ்ச்சி இன்று அனைத்து முருகன் கோவில்களிலும் வெகு...
Join WhatsApp