கோவை: OTTயில் படம் வெளியாகும் தேதியை குறிப்பிடாமல் தள்ளி வைத்தால் நன்றாக இருக்குமென நடிகர் புகழ் தெரிவித்துள்ளார்.
கோவையில் மெட்ராஸ் மாடல் டூரிசம் எனும் தனியார் நிறுவன நிகழ்ச்சியில் காமெடி நடிகர் புகழ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் மெட்ராஸ் மாடல் டூரிசம் கோவையில் நன்கு செயல்பட்டு வருகிறது. இன்னும் அதிகமான இடங்களில் இதனை விரிவுபடுத்த வாழ்த்துக்கள் என்றார்.
சினிமா எங்கள் உயிர் காதல் அதனை தொடர்ந்து செய்து வருகிறோம் என்றும் சிறிய சிறிய படங்கள் கூட தற்பொழுது நல்ல வரவேற்பு பெற்று வருகிறது எனவே அந்த படங்களுக்கும் அனைவரும் ஆதரவளிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
வெள்ளித்திரை என்றாலும் சின்னத்திரை என்றாலும் நம்முடைய வேலையை செய்து கொண்டே இருக்க வேண்டும் என தெரிவித்த அவர் வெள்ளி திரையில் வாய்ப்பு கிடைத்த பொழுது அதனை செய்தேன் தற்பொழுது சின்ன திரையில் வாய்ப்பு கிடைக்கும் போது அதனையும் செய்கிறேன் என தெரிவித்தார்.
முன்பெல்ல்லாம் OTT இல்லாததால் அனைவரும் திரையரங்கிற்கு செல்ல வேண்டிய சூழல் இருந்தது இல்லையெனில் தொலைக்காட்சிகளில் போடும்பொழுது காத்திருந்து பார்த்துக் கொள்ளலாம் என்ற சூழலில் இருந்தது என தெரிவித்த அவர் தற்பொழுது OTT இருப்பதால் முன்பாகவே எந்த தேதியில் படம் வெளியாகிறது என்று அறிவித்து விடுகிறார்கள் ஆகவே அனைவரும் அதில் பார்த்துக் கொள்ளலாம் என்று இருந்து விடுகிறார்கள். எனவே அதனை மட்டும் தள்ளி வைத்தால் நன்றாக இருக்கும் என தெரிவித்தார்.
கதாநாயகனாக நடிக்க வேண்டும் என்பது ஆசை அல்ல அந்த கதைக்கு என்ன தேவையோ அதை நான் செய்து கொண்டிருக்கிறேன் என தெரிவித்தார்.

