கோவை: சுந்தராபுரம் பகுதியில் பழைய குடோனில் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பான சூழல் நிலவியது.
கோவை சுந்தராபுரம் பகுதியில் பழைய இரும்பு, பிளாஸ்டிக் குடோனில் தீப்பிடித்ததால் அதிகளவிலான கரும்புகை வெளியேறியது.
கோவை பொள்ளாச்சி சாலையில் சுந்தராபுரம் பகுதியில் ராமச்சந்திரன் என்பவருக்கு சொந்தமான பழைய இரும்பு மற்றும் பிளாஸ்டிக் குடோன் உள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடோனை பூட்டி விட்டு சென்றிருந்த நிலையில் இன்று அந்த குடோன் உள்ளே தீ பிடித்துள்ளது.

பிளாஸ்டிக் பொருட்கள் இருந்ததால் அதிக அளவிலான கரும்புகை குடோனில் இருந்து வெளியேறியுள்ளது. அதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கும் காவல்துறையினருக்கும் தகவல் அளித்தனர் மேலும் ராமச்சந்திரனுக்கும் தகவல் அளித்துள்ளனர்.
பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர் முதற்கட்ட விசாரணையில் மின்சார கசிவு காரணமாக தீப்பிடித்திருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து சுந்தராபுரம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குடோனில் தீ பிடிப்பு ஏற்பட்டு அதிக அளவிலான கரும்புகை வெளியேறியதால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.

