கோவை பைபாஸ் சாலை அருகே தீ விபத்து…

கோவை: கோவையில் தனியார் பிளாஸ்டிக் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தால் கரும்புகை சூழ்ந்தது.

கோவையில் சேலம் கொச்சின் பைபாஸ் சாலையில் பிளாஸ்டிக் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தால் அதிகளவிலான கரும்புகை வெளியேறியது.

Advertisement

கோவை மாவட்டம் சேலம் கொச்சின் பைபாஸ் சாலையில் தனியாருக்கு சொந்தமான பிளாஸ்டிக் குடோன் ஒன்று இயங்கி வருகிறது. இங்கு பல்வேறு பிளாஸ்டிக் பொருட்கள் வைக்கப்பட்டிருந்த நிலையில் திடீரென இன்று மதியம் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. குடோனில் ஏற்பட்ட தீ வெளியில் காய்ந்த பொருட்கள் செடிகள் மீது பரவிய நிலையில் அப்பகுதியில் அதிகளவிலான கரும்புகை எழுந்தது.

இதனை அடுத்து அப்பகுதி மக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்ததை தொடர்ந்து சம்பவ இடத்திற்குச் சென்ற சுந்தராபுரம் தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்

தேசிய நெடுஞ்சாலையில் அதிக அளவிலான கரும்புகை எழுந்ததால் வாகன ஓட்டிகளும் அப்பகுதி மக்களும் மூச்சு விடுவதற்கு சிரமத்திற்கு உள்ளாகினர் இதன் காரணமாக அப்பகுதியில் பதட்டமான சூழல் ஏற்பட்டது.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

கோவையில் உழைப்பாளர் நலக்கூடம் திறப்பு…

கோவை: கோவை இராமநாதபுரம் பகுதியில் உழைப்பாளர் நலக்கூடம் திறக்கப்பட்டது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியம் சார்பில் கட்டுமானத் தொழிலாளர்களுக்கான உழைப்பாளர் நலக்கூடத்தை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தபோது, இராமநாதபுரம்...

Video