Jobs in Coimbatore: செய்தி எழுதத் தெரிந்தவர்கள் வீட்டிலிருந்தே பணியாற்றலாம்!

Jobs in Coimbatore: நியூஸ் க்ளவுட்ஸ் கோயம்புத்தூர் (NCC) செய்தித்தளத்தில் Freelance Content Writer பணியிடங்களுக்கு பணியாளர்கள் தேர்வு நடைபெறுகிறது.

தமிழ் மொழியில் செய்தி எழுதும் திறன் கொண்டவர்களுக்கு, வீட்டிலிருந்தே பணியாற்றும் புதிய வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் மீடியா வளர்ச்சி அதிகரித்து வரும் நிலையில், தமிழ் செய்தி எழுதும் திறமை உள்ளவர்களுக்கு இந்த வாய்ப்பு பொருத்தமானதாக இருக்கும்.

இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் தமிழ் மொழியை பிழையின்றி எழுதவும், படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். மேலும், கோயம்புத்தூர் பகுதிகளை நன்கு அறிந்திருப்பதும் அவசியமாகும். குறிப்பாக, தமிழ் செய்திகளை செய்தி நடையில் எழுதும் திறன் கொண்டவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

இந்த வேலை முழுக்க முழுக்க ‘Work From Home’ முறையில் நடைபெறும். அதனால், விண்ணப்பதாரர்கள் கட்டாயமாக தனிப்பட்ட லேப்டாப் வைத்திருக்க வேண்டும். உள்ளூர் செய்திகளை செய்தி கட்டுரை வடிவில் எழுதுதல், டிரெண்டிங் செய்திகளை எழுதுதல் மற்றும் பிழைகளை திருத்தி செய்திகளை பப்ளிஷ் செய்தல் போன்ற பணிகள் இதில் அடங்கும்.

தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு துறை தரத்திற்கேற்ற (Industry Standard) சம்பளம் வழங்கப்படும். தமிழ் செய்தித்துறையில் ஆர்வம் மற்றும் திறமை கொண்டவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு கிடையாது.

Short list செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் மின்னஞ்சல் மூலமாக அறிவிக்கப்படுவர். தொடர்ந்து, NCC குழுவினர் கொடுக்கும் தலைப்பின் கீழ் 400 வார்த்தைகளுக்கு குறையாமல் கட்டுரை ஒன்றை சமர்ப்பிக்க வேண்டும். இதன் மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

மொத்தம் 3 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதிக்கு ஏற்ப மாதாந்திர ஊதியம் வழங்கப்படும். பிரதி மாத இறுதி அல்லது வரும் மாதத்தின் முதல் தேதியில் ஊதியம் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும்.

  • இந்த வேலைவாய்ப்புக்கு தேர்வு செய்யப்படும் பணியாளர்கள், பங்களிப்பாளர் (பகுதி நேர வேலை) என்ற அடிப்படையில் பணியமர்த்தப்படுவார்கள். முழுநேர ஊழியராக அல்ல.
  • பணியாளர் தேர்வுக்கான கட்டுரைகளை காபி பேஸ்ட், அல்லது ஏஐ மூலம் உருவாக்கம் செய்து சமர்ப்பிப்பவர்கள் NCC தளத்தின் வருங்கால வேலைவாய்ப்புகளுக்கு விண்ணப்பிக்க முடியாது.

விருப்பமுள்ளவர்கள் தங்கள் புகைப்படத்துடன் கூடிய சுயவிவரத்தை support@newscloudscoimbatore.com என்ற இ-மெயில் முகவரிக்கு அனுப்பலாம். விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி தேதி பிப்ரவரி 24 2026

அன்புடன்,
NCC
செய்திக்குழு

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

போத்தனூரில் சிறுத்தையா? வைரலாகும் வீடியோ… வனத்துறை கூறுவது என்ன?

கோவை போத்தனூரில் சிறுத்தை நடமாட்டம் என வைரலான வீடியோ குறித்து வனத்துறை விளக்கம் அளித்துள்ளது. அது சிறுத்தை அல்ல, காட்டு பூனை என அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

Video

போத்தனூரில் சிறுத்தையா? வைரலாகும் வீடியோ… வனத்துறை கூறுவது என்ன?

கோவை போத்தனூரில் சிறுத்தை நடமாட்டம் என வைரலான வீடியோ குறித்து வனத்துறை விளக்கம் அளித்துள்ளது. அது சிறுத்தை அல்ல, காட்டு பூனை என அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.