கோவையில் பயிர் மேம்பாட்டில் முழு மரபணு தொகுப்பு பயிற்சி…

கோவை: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் பயிர் மேம்பாட்டில் முழு மரபணுத் தொகுப்பு முதல் முழு வெளிப்படும் பண்புகளின் தொகுப்பு வரை செய்முறை பயிற்சி துவங்கியது.

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் “பயிர் மேம்பாட்டில் முழுமரபணுத் தொகுப்பு முதல் முழு வெளிப்படும் பண்புகளின் தொகுப்பு வரை” என்ற தலைப்பில் இரண்டு நாள் செய்முறை பயிற்சி இன்றும் நாளையும் நடைபெறுகிறது.

இந்த பயிற்சி நிகழ்ச்சியில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் மற்றும் கேரள வேளாண்மை பல்கலைக்கழக மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியை, தாவர உயிரித் தொழில்நுட்பத் துறையின் பேராசிரியரும் துறைத் தலைவருமான முனைவர் கோகிலாதேவி வரவேற்புரை வழங்கி தொடங்கி வைத்தார். காலநிலை மாற்றத்தைக் கையாளக்கூடிய பயிர்களை உருவாக்குவதில் ஃபீனோமிக்ஸ் மற்றும் ஜீனோமிக்ஸ் ஒருங்கிணைப்பின் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார்.

தாவர மூலக்கூறு உயிரியல் மற்றும் உயிரித் தொழில்நுட்ப மையத்தின் இயக்குநரான முனைவர் செந்தில் பயிற்சியின் நோக்கத்தை விளக்கி ஜீனோமிக்ஸ் தொழில்நுட்பங்களில் ஏற்பட்ட முன்னேற்றங்களையும், பயிர் மேம்பாட்டில் ஃபீனோமிக்ஸ் மற்றும் ட்ரோன் தளங்களின் பயன்பாட்டையும் எடுத்துரைத்தார். இந்த பயிற்சி DBT Builder Programme திட்டத்தின் கீழ் நடத்தப்பட்டது.

ஃபீனோமிக்ஸ் ஆய்வுகள் மூலம் உருவாகும் பெரிய அளவிலான துல்லியமான தரவுகளை செயற்கை நுண்ணறிவு கருவிகள் மூலம் பகுப்பாய்வு செய்யலாம் என்றும், அடுத்த தலைமுறை வரிசை நிர்ணய தொழில்நுட்பங்களின் மூலம் கிடைக்கும் ஜீனோமிக் தகவல்களுடன் இணைத்து பயிர் மேம்பாட்டு ஆராய்ச்சிகளை மேற்கொள்ளலாம் என்றும் தெரிவித்தார்.
மேலும் எதிர்கால ஆராய்ச்சியாளர்கள் பல்துறை திறன்களுடன் உருவாக வேண்டும் எனவும் கூறினார்.

விதை மைய இயக்குநரான முனைவர் உமாராணி அவர்கள் தொடக்க உரையாற்றி, விதை சான்றிதழ் வழங்கும் செயல்முறைகளில் மேம்பட்ட ஃபினோடைப்பிங் தளங்களின் முக்கியத்துவத்தையும், மரபணு தூய்மையான விதை உற்பத்திக்கான முக்கிய வழிமுறைகளையும் விளக்கினார்.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற தொழில்நுட்ப அமர்வுகளில் வளநிபுணர்கள் பல்வேறு அழுத்தங்களைத் தாங்கும் பயிர்களை உருவாக்குவதற்கான ஜீனோமிக்ஸ் உதவியுடன் இனப்பெருக்கம்மூலக்கூறு குறியீடுகளின் உதவியுடன் இனப்பெருக்கம் மூலம் வீழ்ச்சி இல்லாத வகைகளை உருவாக்குதல் ஃபீனோமிக்ஸ் தளத்தை பயன்படுத்தி திரையிடும் முறைகள், பயிர் ஜீனோம்களின் De novo assembly மற்றும் பயிர் மேம்பாட்டு திட்டங்களுக்கான SNP genotyping தளங்கள் போன்ற தலைப்புகளில் விரிவான விளக்கங்களை வழங்கினர்.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

கோவை நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்…

கோவை: கோவை நீதிமன்றம் வளாகத்தில் உள்ள இலவச சட்ட உதவி மையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், பாஸ்போர்ட் அலுவலகம் ஆகியவற்றிற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு வெடிகுண்டு மிரட்டல்...

Video

கோவையில் காரை கரப்பான் பூச்சி போல் கவிழ்த்துவிட்டு மட்டை – வீடியோ

கோவை அருகே தாறுமாறாக வந்த கார் சாலையோரத்தில் கவிழ்ந்த நிலையில், போதையில் இருந்த டிரைவர் அங்கேயே படுத்து உறங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.