கோவை: பால் உற்பத்தியாளர்களுக்கு கூடுதலாக ஒரு லிட்டருக்கு 3 ரூபாய் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோயமுத்தூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 327 பிரதம சங்கங்களில் பால் வழங்கும் பால் உற்பத்தியாளர்களின் நலன் கருதியும் அவர்களை ஊக்கப்படுத்தும் பொருட்டும், சென்னை இயக்குநர் பால் உற்பத்தி மற்றும் பால்பண்ணை மேம்பாட்டு துறை சார்பில் உத்தரவு ஒன்று பிறபிக்கப்பட்டுள்ளது.
அதன்படி தற்போது தமிழக அரசால் வழங்கப்படும் ரூ.3/- ஊக்கத்தொகையுடன் கூடுதலாக லிட்டர் ஒன்றுக்கு ரூ.3/- கோயமுத்தூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய நிதியிலிருந்து மார்ச் 2026 மற்றும் ஏப்ரல் 2026 மாதங்களுக்கு மொத்தமாக லிட்டர் ஒன்றுக்கு ரூ.6/- பால் வழங்கும் உறுப்பினர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கோயமுத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பால் உற்பத்தியாளர்களும் கிராம அளவில் செயல்படும் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்திற்கு பால் வழங்கி பயன்பெறுமாறு மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக கேட்டுக் கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

