Header Top Ad
Header Top Ad

கோவை வஉசி மைதானத்தில் தொடங்குகிறது பொருட்காட்சி!

கோவை: வஉசி மைதானத்தில் நயாகரா நீர்வீழ்ச்சி, ஸ்னோ லாண்ட், கடல் தேவதைகள் உள்ளிட்ட அம்சங்களுட்ன பொருட்காட்சி தொடங்க உள்ளது.

Advertisement

செப்டம்பர் 17ஆம் தேதி முதல் அக்டோபர் 26ஆம் தேதி வரை இந்த பொருட்காட்சி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் நயாகரா நீர்வீழ்ச்சி, ஸ்னோ லாண்ட், கடல் தேவதைகளின் சாகசங்கள் போன்ற வித்தியாசமான காட்சிகள் இடம்பெற உள்ளன. பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் விளையாடி மகிழும் வகையில் பல்வேறு ராட்டினங்கள், 3D திகிலூட்டும் பேய் வீடு, சிறுவர் விளையாட்டு அம்சங்கள், பால் கேம், படகு சவாரி உள்ளிட்ட சுவாரஸ்யமான நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

மேலும், உணவுப் பிரியர்களுக்காக டெல்லி அப்பளம், பானி பூரி, சோலா பூரி, மதுரை ஜிகர்தண்டா, ஐஸ்கிரீம், கூல்டிரிங்ஸ் போன்ற 20-க்கும் மேற்பட்ட வித்தியாசமான உணவுவகைகளை விற்பனை செய்யும் ஸ்டால்கள் இடம்பெறுகின்றன.

இதனுடன், வீட்டு உபயோகப்பொருட்கள், ஆடைகள் என 60க்கும் மேற்பட்ட ஸ்டால்களில் பொருட்கள் விற்பனை செய்யப்பட உள்ளதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

கோவை செய்திகள், அரசு, ரயில்வே மற்றும் மின்தடை அறிவிப்புகளுக்கு எங்கள் வாட்ஸ்-ஆப் குழுவில் இணைவீர் 👈

Advertisement

தினசரி மாலை 3 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெறும் இந்த பொருட்காட்சி நடைபெறுகிறது.

Recent News