தமிழகத்தில் குரூப் 1 தேர்வு மற்றும் குரூப் 1ஏ தேர்வுக்கான அறிவிப்பாணையை டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் துணை ஆட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர், கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர், ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் மற்றும் தீயணைப்பு, வேலைவாய்ப்பு மாவட்ட அலுவலர் பணியிடங்கள் குரூப் 1 தேர்வு மூலம் நிரப்பப்படுகின்றன.
இதனிடையே குரூப் 1, குரூப் 1ஏ தேர்வுகளுக்கான அறிவிப்பாணையை டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ளது.கு
குரூப் 1 முதல்நிலைத் தேர்வு ஜூன் மாதம் 15ம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்வுகளுக்கு இன்று முதல் வரும் ஏப்ரல் மாதம் 30ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தொழிலாளர் நலத்துறை இணை ஆணையர் பதவிக்கும் இந்த முறை குரூப் 1 தேர்வு நடத்தப்படுகிறது. குரூப் 1ல் மொத்தம் 70 பணியிடங்களும், குரூப் 1 ஏ தேர்வு மூலம் 2 பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளன.