Group 4 Exam: குரூப் 4 தேர்வு தேதி அறிவிப்பு; 3,935 பணியிடங்கள்… விண்ணப்பிக்க லிங்க்…!

Group 4 Exam: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) நடத்தும் குரூப் 4 தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

டி.என்.பி.எஸ்.சி நடத்தும் குரூப் 4 தேர்வு மூலம் 3,935 அரசுப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. கிராம நிர்வாக அலுவலர், அலுவலக உதவியாளர், டைப்பிஸ்ட், கிளர்க், வன பாதுகாப்பாளர், உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் இத்தேர்வின் மூலம் நிரப்பப்பட உள்ளன.

தமிழகத்தில் குரூப் 4 தேர்வு ஜூலை 12ம் தேதி நடைபெறுகிறது. இன்று முதல் வரும் மே மாதம் 24ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது.

தேர்வு ஜூலை 12ம் தேதி காலை 9.30 மணிக்குத் தொடங்கி 12.30 மணி வரை நடைபெற உள்ளது. டி.என்.பி.எஸ்.சி இணையதளம் மூலம் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசுப் பணிக்குத் தயாராகிக் கொண்டிருப்போர் பின்வரும் டி.என்.பி.எஸ்.சி இணையத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்: https://tnpsc.gov.in/home.aspx

Recent News

Latest Articles