Header Top Ad
Header Top Ad

கோவையில் வெளிப்படையாக ஹை-டெக் விபச்சாரம்; மோசடி கும்பலால் ஏமாறும் இளசுகள்!

கோவை: சமூக வலைதளங்கள் மூலமாக கோவையில் வெளிப்படையாக விபச்சாரம் நடைபெற்று வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியான பெரிய நகரான கோவையில் பல்வேறு பெரு தொழில் நிறுவனங்கள், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.

மேலும், ஏராளமான கல்லூரிகளும் செயல்பட்டு வருகின்றன. இதனால் வெளியூர் மக்கள் பலரும் கோவையில் வந்து தங்கி பணிபுரிந்தும், படித்தும் வருகின்றனர்.

இந்த நிலையில், கோவை மக்களையும், கோவையில் வந்து தங்கி பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களைக் குறிவைத்து விபச்சாரம் படு ஜோராக நடைபெற்று வருகிறது.

விபச்சாரம் தொடர்பாக சமூக வலைதளங்களில் பதிவிட்டு, அழகிகளை புக் செய்யும் போக்கும் வெளிப்படையாகவே நடைபெற்று வருகிறது. இதற்கு ரூ.10,000 முதல் லட்சக்கணக்கில் வசூலிக்கப்பட்டு ஹை-டெக் விபச்சாரம் நடைபெறுகிறது.

சில மோசடி போஸ்டுகளில், இன்று முதல் கோவையில் குறிப்பிட்ட இளம் பெண் இருப்பதாகவும், அவரை சந்திக்க தொடர்பு கொள்ளலாம் என்றும் விளம்பரம் செய்யப்படுகிறது. மேலும், இதனுடன் ஒரு டெலிகிராம் லிங்க் தரப்படுகிறது.

Advertisement

இதனை உண்மையென நம்பிச் செல்லும் இளைஞர்கள் மற்றும் முதியவர்களிடம் பணம் பறிக்கும் சம்பவங்களும் தொடர்ந்து வருகிறது. இந்த விஷயத்தில் பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும்.

இதனிடையே இத்தகைய விபச்சார கும்பலை மாநகர போலீசார் கண்காணித்து, கைது செய்து சிறையிலடைக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Recent News