கோவை: சங்கனூரில் 4 ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மையம் திறக்கப்பட உள்ளது.
கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்திற்குட்பட்ட சங்கனூர் சாமி வீதியில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் தனியார் பங்களிப்புடன் (எல் அண்ட் டி, எம் பிடி மிசைல் சிஸ்டம் சார்பில்) ரூ.1.07 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட 4 ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மையம் வருகின்ற 02.03.2026 திங்கட்கிழமை அன்று திறக்கப்பட உள்ளது.

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண் 32-க்கு உட்பட்ட சங்கலூர் சாமி வீதியில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் எல் அண்ட் டி. எம் பி டி ஏ மிசைல் சிஸ்டம் நிறுவனத்தின் சமூகப் பொறுப்பு நிதியிலிருந்து ரூ.1.07 கோடி மதிப்பீட்டில் சிறப்பு கட்டுமான வடிவமைப்புடன் 4 எண்ணிக்கையிலான ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மையங்கள் கட்டுவதற்கான பணிகள் கடந்த 03.09.2025 அன்று தொடங்கப்பட்டது.
தற்போது அந்த பணிகள் நடைபெற்று பணிகள் நிறைவு பெற்றுள்ளது. இம்மையத்தில், 1600 சதுர அடி, பரப்பளவில் 4 எண்ணிக்கையிலான வகுப்பறைகள், 650 சதுர அடி பரப்பளவில் சமையலறை, பொருள் இருப்பு அறைகள் மற்றும் கழிவறைகள் என நவீன வசதிகளுடன் இம்மையம் கட்டப்பட்டுள்ளது.

மேலும் புல்வெளி 260 சதுர அடி பரப்பளவிலும், 350 சதுர அடி பரப்பளவில் சிறுவர் விளையாட்டு திடல் என 3230 சதுர அடி பரப்பளவில் கட்டிடம் உட்பட 6746 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. இம்மையத்தின் மூலமாக சங்கனூர், கண்ணப்ப நகர், அண்ணா நகர் குட்டை அய்யாவு வீதி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அதிக எண்ணிக்கையிலான குழந்தைகள் பயன் பெறுவார்கள் என மாநகராட்சி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

