Header Top Ad
Header Top Ad

எம்.பி சீட் கிடைத்தவுடன் கமல் பேச்சு மாறிவிட்டது: கோவையில் நயினார் பேட்டி!

கோவை: எம்.பி சீட் கிடைத்தவுடன் கமல் பேச்சு மாறிவிட்டது என கோவையில் பாஜக மாநில தலைவர் நயினார் தெரிவித்துள்ளார்…

கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விமானம் மூலம் கோவை வந்தடைந்தார்.

Advertisement
Lazy Placeholder

விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், மதுரையில் நடைபெற்ற திமுக பொதுக் கூட்டத்தின் போது ஒரு இடத்தில் தூர்வாரப்படாத இடங்கள் மறைக்கப்பட்டது குறித்தான கேள்விக்கு, இதுதான் திராவிட மாடல் அரசு என்றும் முதல்வருக்கு இந்த நாட்டில் என்ன நடக்கிறது என்று தெரியவில்லை அதிகாரிகள் அதனை மறைக்கிறார்கள் என தெரிவித்தார்.

அதிகாரிகள் நாட்டில் என்ன நடக்கிறது என்பது குறித்து கவனித்து முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்றும் மதுரையில் அந்த இடங்களை எல்லாம் சுத்தப்படுத்தி விட்டு சென்று இருந்தால் நன்றாக இருந்திருக்கும் என தெரிவித்தார்.
முதலமைச்சர் டெல்லிக்குச்சென்று மத்திய அரசிடம் ஆறுகளை எல்லாம் தூர்வார வேண்டும் என்று கூறுகிறார் ஆனால் அவர்கள் இதனை எல்லாம் சுத்தம் செய்து இருந்தால் மக்களுக்கு நன்மை பயக்கும் என பதில் அளித்தார்.

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் திமுக சென்றது குறித்தான கேள்விக்கு அது அவருடைய சொந்த விஷயம் அது பற்றி கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என கூறினார். மேலும் வாரிசு அரசியல் இருக்கக் கூடாது என்று முதலில் கூறிய அவர் எம் பி சீட்டு கிடைத்தவுடன் வாரிசு அரசியல் இருக்கலாம் என்று கூறுகிறார் என்றும் விமர்சித்தார். எந்த மொழி பெரியது என்று கருத்து சொல்ல முடியாது என்றும் அவர் அவர்களுக்கு அவரவர் தாய்மொழி முக்கியம் என தெரிவித்தார். மேலும் நான் முதல்வர் ஜெயலலிதா கர்நாடகா சென்ற பொழுது தமிழ் வாழ்க என்று கூறிவிட்டு வந்ததாகவும் தெரிவித்தார். கமலஹாசன் ராஜ்யசபா இடத்திற்காக அவரது நிலையில் இருந்து மாறிவிட்டார் எனவும் விமர்சித்தார்.

Advertisement
Lazy Placeholder

தமிழ்நாட்டில் மின் கட்டணம் அறிவிக்கப்படாமல் உயர்ந்து இருக்கிறது என்றும் அது பரிசீலனை செய்ய வேண்டிய ஒன்று என தெரிவித்தார். மத்திய அரசு திட்டங்கள் எதையும் மாநில அரசு செய்வதில்லை என்றும் மத்திய அரசு திட்டங்களை மறைத்து விட்டு மக்களுக்கு எதையும் செய்யாத அரசாக மாநில அரசு இருப்பதாக குற்றம் சாட்டினார்.

2026 இல் இல்லம்தோறும் வீடு வீடாக க
பெட்டிகள் செல்லும் என்று விஜய் கூறியது குறித்தான கேள்விக்கு பதில் அளித்த அவர் அது உண்மைதான் என்றும், ரித்தீஷ் 300 கோடி ரூபாய்க்கு வீடும் ஆகாஷ் 500 கோடி ரூபாய்க்கு வீடும் கட்டுவதாகவும் நடிகைகளுக்கு லட்சக்கணக்கில் Bag வாங்கி கொடுப்பதாக எல்லாம் கூறுகிறார்கள் என்றும் அப்படி பார்த்தால் விஜய்க்கு கூறுவது உண்மைதான் என தெரிவித்தார். எனவே வரக்கூடிய நாட்களில் யாருக்கு வாக்களித்தால் நல்லதாக இருக்கும் என்று மக்கள் ஆராய்ந்து தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

ஜூன் 22 ஆம் தேதி மதுரையில் முருக பக்தர் மாநாடு நடைபெறுவதாக தெரிவித்த அவர் அந்த மாநாட்டில் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண் ஆகியோர் பங்கேற்கிறார்கள் என தெரிவித்தார். மேலும் அதில் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

பாமக விவகாரம் குறித்தான கேள்விக்கு அது உட்கட்சி பிரச்சனை அதை பற்றி கருத்து சொல்ல முடியாது என தெரிவித்து சென்றார்.

Recent News

Latest Articles