கோவை: காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய நிலையில், கோவை ரயில் நிலையத்தில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அப்பாவி சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்ட சம்பவம் உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
இதன் ஒரு பகுதியாக கோவையில் ரயில்வே பாதுகாப்புத் துறையினரும், ரயில்வே வெடிகுண்டு சோதனை நிபுணர்களும், போலீசாரும் இணைந்து கோவை ரயில் நிலையத்தில் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
ரயில் பயணிகளின் உடைமைகள் மற்றும் ரயில் பெட்டிகளில் மோப்ப நாய்கள் மூலம் வெடிகுண்டு சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

ரயில்வே பாதுகாப்புப் படை ஆய்வாளர் சுனில் குமார் தலைமையில் இந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இந்த தீவிர சோதனை நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்தனர்.