Header Top Ad
Header Top Ad

முதல் முறையாக தொடங்குகிறது Khelo India Water Sports Festival!

காஷ்மீர்: காஷ்மீரில் கேலோ இந்தியா நீர்விளையாட்டு விழா இன்று முதல் தொடங்க உள்ளது. இது இந்தியாவில் Khelo India நடத்தும் முதல் நீர் விளையாட்டு திருவிழா என்ற பெருமையைப் பெற்றுள்ளது.

மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு விவகார அமைச்சகம், ஜம்மு காஷ்மீர் விளையாட்டு மன்றம், ‘ஃபிட் இந்தியா’ திட்டம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் Khelo India Water Sports Festival 2025 ஜம்மு & காஷ்மீரில் நடைபெற உள்ளது.

Advertisement

இந்த விழா ஆகஸ்ட் 21 முதல் 23 வரை டால் ஏரி பகுதியில் நடைபெறுகிறது. “Dal Lake Ki Shaan, Khel Se Badhe Pehchaan” என்ற கருத்தில் நடைபெறும் இந்த விழாவின் தொடக்க விழா இன்று மாலை 6 மணிக்கு ஸ்ரீநகர் SKICC வளாகத்தில் நடைபெற உள்ளது.

இந்த விழாவில் முதன்மை விருந்தினராக மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அரசுத் துணை அமைச்சர் ராக்ஷா நிகில் கட்சே மற்றும் ஜம்மு & காஷ்மீர் துணை ஆளுநர் மனோஜ் சின்ஹா பங்கேற்கின்றனர்.

மேலும், ஜம்மு & காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் ஓமர் அப்துல்லா சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். அதோடு, ஜம்மு & காஷ்மீர் அமைச்சரவை உறுப்பினர் சதீஷ் சர்மா கலந்து கொள்கிறார்.

Advertisement

ஜம்மு & காஷ்மீர் விளையாட்டு மன்றச் செயலாளர் நுஸ்ஹத் குல் விழாவை ஒருங்கிணைக்கிறார்.

இந்த விழா ஜம்மு & காஷ்மீரில் சுற்றுலாவை ஊக்குவிப்பதோடு, இந்தியாவின் நீர்விளையாட்டு திறமைகளையும் உலக அரங்கில் வெளிப்படுத்தும் நிகழ்வாகும்.

Recent News