Header Top Ad
Header Top Ad

தொண்டாமுத்தூர் பகுதியில் தென்பட்ட சிறுத்தை

கோவையில் விவசாய தோட்டத்தின் அருகில் சிறுத்தை நடமாட்டம் சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ காட்சிகள் – அச்சத்தில் அப்பகுதி பொதுமக்கள் !!!

கோவை மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய தொண்டாமுத்தூர் சுற்றி உள்ள பல்வேறு இடங்களில் அவ்வப்போது வனவிலங்குகள் வனப் பகுதியை விட்டு வெளியேறி உணவு தேடி குடியிருப்பு பகுதிகளில் சுற்றித் திரிகின்றன. இந்த நிலையில் குப்பேபாளையம் பகுதியில் சக்திவேல் என்பவரின் வீட்டு தோட்டத்தில் சிறுத்தை நடமாடிய காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டு இருந்த சி.சி.டி.வி காட்சிகளில் பதிவாகி இருந்ததாக தெரிகிறது.

சிறுத்தை நடமாட்டம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு உள்ள நிலையில் வனத் துறையினர் பொது மக்களின் அச்சத்தை போக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்து உள்ளது.

சமீபத்தில் வால்பாறையில் சிறுமியை சிறுத்தை இழுத்துச் சென்ற கொன்ற நிகழ்வு பெரும் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கக் கூடிய சூழலில் சிறுத்தையின் நடமாட்டம் தொடர்பான இந்த வீடியோ மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி உள்ளது.

சிறுத்தையின் வீடியோ சமூக வலைதளங்களில் பரவுவதால் அப்பகுதியில் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

வீடியோ காட்சிகள்…

Advertisement

Advertisement

Recent News