Weather Report Coimbatore: கோவையில் அடுத்த 6 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, கடந்த 24 மணி நேரத்தில் கோவையில் குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸ், அதிகபட்சமாக 31 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.
கோவையில் இன்றும் நாளையும் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இந்த இரு நாட்களிலும் குறைந்தது 22 டிகிரி செல்சியஸ் முதல், அதிகபட்சம் 30-31 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகலாம்.
ஆகஸ்ட் 18 மற்றும் 19ம் தேதிகளில் மழைக்கு வாய்ப்பு இல்லை என்றும். இந்த நாளில் அதிகபட்சமாக 30 முதல் 32 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 20 மற்றும் 21 தேதிகளில் கோவை மாவட்டத்தில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு; வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.
அதே நேரத்தில் வெப்ப நிலை, 32-33 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகலாம் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
Raincoat for Men waterproof: Order Now

