கோவை: கோவையில் ஆங்காங்கே பெய்து வரும் லேசான மழையால் குளிர்ச்சியான சூழல் நிலவியது.
கோவையில் சூலூர், கருமத்தம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் லேசான மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.
கோடை காலம் துவங்கியுள்ள நிலையில் கோவை, நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு பகுதிகளில் கோடை மழை பெய்ய கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி கோவையில் நேற்று முன்தினம் நகர் பகுதிகளில் லேசான மழை பெய்தது.
இந்நிலையில் தற்பொழுது சூலூர், கருமத்தம்பட்டி, கணியூர் சுற்று வட்டார பகுதிகளில் மிதமான மழை பெய்தது.
கோவையில் கடந்த சில தினங்களாகவே வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்த நிலையில் ஆங்காங்கே லேசான மழை பெய்ததால் வெப்பம் சற்று தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. அதன்படி சூலூர் கருமத்தம்பட்டி கணியூர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில தினங்களாகவே அதிக அளவு வெயில் வாட்டி வந்த நிலையில் நேற்று மாலை சிறிது நேரம் சூலூர் பகுதியில் லேசான மழை பெய்தது.
இன்று அதிகாலை சூலூர், கருமத்தம்பட்டி, கணியூர் உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.

