கோவையில் முடிவுற்ற பணிகளையும், புதிய பணிகளையும் துவக்கி வைத்த எம்பி…

கோவை: கோவை எம்பி கணபதி ராஜ்குமார் மாநகரில் பல்வேறு முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து பல்வேறு புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

கோயம்புத்தூர் மாநகராட்சி, மத்தியம்,கிழக்கு மற்றும் மேற்கு மண்டலங்களுக்குட்பட்ட பகுதிகளில் ரூ. 3.38 கோடி மதிப்பீட்டில் 7
எண்ணிக்கையிலான முடிவுற்ற பல்வேறு வளர்ச்சித்திட்டப் பணிகளை கோயம்புத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர் கணபதி ராஜ்குமார் திறந்து வைத்தும் மற்றும் ரூ.66.80 இலட்சம் மதிப்பீட்டிலான பாதான சாக்கடை பிரதான குழாய்கள் அமைக்கும் பணியினை துவக்கி வைத்தார்.

Advertisement

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட கிழக்கு மேற்கு வடக்கு, தெற்கு மற்றும் மத்தியம் என ஐந்து மண்டலங்களுக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு வளர்ச்சித்திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அந்த வகையில் மத்திய மண்டல வார்டு எண்.06க்குட்பட்ட பொன்னே வீதி கோவை மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியின் வளாகத்தில் மாநகராட்சி பொது நிதியின் கீழ் ரூ.25.50 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள உள்விளையாட்டு அரங்கத்தினையும்

மேற்கு மண்டலம், வார்டு எண் விக்குட்பட்ட லிங்கலூர் பகுதியில் மாநகராட்சி பொது நிதியின் கீழ் ரூ.25.00 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள பொது கழிப்பிடத்தினையும், வார்டு எண் 37க்குட்பட்ட கல்வீரம்பாளையம் பகுதியில் மாநகராட்சி பொது நிதியின் கீழ் ரூ.74.00 இலட்சம் மதிப்பீட்டில் 3.50 இலட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிதாக கட்டப்பட்டுள்ள கீழ்நிலைத்தொட்டி மற்றும் மோட்டார் அறையினையும்

வார்டு எண் 38க்குட்பட்ட மருதமலை பகுதியில் தூய்மை பாரத திட்டத்தின் கீழ் (SHM) 15.00 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள பொது கழிப்பிடத்தினையும், மத்திய மண்டலம், வார்டு எண்.6க்குட்பட்ட ரேஸ்கோர்ஸ் பகுதியில் மாநகராட்சி பொது நிதியின் கீழ் ரூ.99.50 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்ட (Surplus Parking) திறந்த வெளி வாகனங்கள் நிறுத்தும் இடத்தினையும் மேயர், மாநகராட்சி ஆணையாளர் அவர்கள் ஆகியோர் முன்னிலையில், கோயம்புத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் திறந்து வைத்தார்.

அதனைத்தொடர்ந்து கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலம், வார்டு எண்3 க்குட்பட்ட கங்கம் ரவுண்டான அருகில் தனியார் பர்களிப்புடன் (கோடக் மகேந்திரா) 3.75 இலட்சம் மதிப்பீட்டின் புனரமைக்கப்பட்டுள்ள மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் ரூ39.12 இலட்சம் மதிப்பீட்டில் எண்ணிக்கையிலான அங்கன்வாடி மையங்கள் புனரமைக்கப்பட்டது.

அங்கன்ளடி மைய கட்டிடத்தினையும் மற்றும் கிழக்கு மண்டலம், வார்டுண் சிக்குட்பட்ட விளாங்குறிச்சியில் 15th CFC (UPHC) திட்டத்தின் கீழ் ரூ.60.00 இலட்சம் மதிப்பீட்டில் பொது சுகாதார மையத்திற்கு கட்டப்பட்டுள்ள கூடுதல் கட்டிடத்தினையும் மொத்தம் ரூ.3.38 கோடி மதிப்பீட்டில் 7 எண்ணிக்கையிலான பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகளை மாண்புமிகு மேயர் அவர்கள், மாநகராட்சி ஆணையாளர் அவர்கள் ஆகியோர் முன்னிலையில் கோயம்புத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர், திறந்து வைத்தார்.

முன்னதாக மத்திய மண்டலம்வார்டு எண்லக்குட்பட்ட திருச்சி சாலை இராமநாதபுரம் சந்திப்பு முதல் இளஸ் அலுவலகம் வரையுள்ள பகுதியில் மாநகராட்சி பொது நிதியின் கீழ் ரூ.66.80 இலட்சம் மதிப்பீட்டில் பாதாள சாக்கடை பிரதான குழாய் மற்றும் தொடர்புகளை மாற்றி அமைத்தல் பணியினை கோயம்புத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் துவக்கி வைத்து பணிகளை விரைவாகவும் தரமாகவும் செய்து முடிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

Video