தேசிய அறிவியல் தினம்- தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் போட்டிகள்- ஆர்வமுடன் பங்கேற்ற பள்ளி மாணவர்கள்…

கோவை: தேசிய அறிவியல் தின விழாவையொட்டி வேளாண் பல்கலையில் பள்ளி மாணவர்களுக்கான அறிவியல் போட்டிகள் நடைபெற்றது.

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் உள்ள தாவர மூலக்கூறு மற்றும் உயிரித்தொழில்நுட்ப மையம் (CPMB&B) மற்றும் உயிரித்தொழில்நுட்ப மகத்துவ மையம் (COXBIT) இணைந்து தேசிய அறிவியல் தினத்தை கொண்டாடும் வகையில் உயிரித்தொழில்நுட்ப மகத்துவ மைய வளாகத்தில் பள்ளி மாணவர்களுக்கான அறிவியல் போட்டிகள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இந்நிகழ்வானது, பள்ளி மாணவர்களிடையே அறிவியல் விழிப்புணர்வை வளர்ப்பளதயும், ஆர்வந்தை ஊக்குவிப்பதை மையமாக கொண்டு நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கோயம்புத்தூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பல்வேறு அரசு மற்றும் தனியார் என மொத்தம் 16 பள்ளிகளைச் சேர்ந்த 390 மாணவர்கள் அவர்களின் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோருடன் பங்கேற்றனர்.

சர் சி.வி.ராமன் அவர்களால் ராமன் விளைவு கண்டுபிடிக்கப்பட்டதை நினைவுகோரும் தேசிய அறிவியல் தினத்தின் முக்கியத்துவத்தையும், இளம் தலைமுறையினரிடையே அறிவியல் மனப்பான்மையை வளர்ப்பதன் அவசியத்தையும் இது எடுத்துரைக்கும் விதமாக அமைந்தது.

கட்டுரைப் போட்டி, வினாடி-வினாப் போட்டி, Canvas Painting மற்றும் மலர் அலங்காரம் போன்ற நிகழ்வுகள் இதில் இடம்பெற்றன.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

ஆண்டின் முதல் சந்திர கிரகணம் 2026: என்ன செய்யலாம்? என்ன கூடாது?

மார்ச் 3ம் தேதி நடைபெறும் ஆண்டின் முதல் சந்திர கிரகணம் மற்றும் ரத்த நிலவு பற்றிய முழு தகவல்கள். கிரகண நேரம், பார்க்கலாமா?, என்ன செய்யலாம்? தெரிந்துகொள்ளுங்கள்.

Video

போத்தனூரில் சிறுத்தையா? வைரலாகும் வீடியோ… வனத்துறை கூறுவது என்ன?

கோவை போத்தனூரில் சிறுத்தை நடமாட்டம் என வைரலான வீடியோ குறித்து வனத்துறை விளக்கம் அளித்துள்ளது. அது சிறுத்தை அல்ல, காட்டு பூனை என அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.