Train Update: நெல்லை – மேட்டுப்பாளையம் சிறப்பு ரயில் நீட்டிப்பு நெல்லை – மேட்டுப்பாளையம் சிறப்பு ரயில் மார்ச் மாதம் இறுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
நெல்லை-மேட்டுப்பாளையம் இடையே வாராந்திர சிறப்பு ரயில் கடந்த 2022ம் ஆண்டு முதல் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த ரயில் நெல்லை ரயில் நிலையத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமை தோறும் (வண்டி எண்: 06030) இரவு 7 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.30 மணிக்கு மேட்டுப்பாளையம் வந்து சேரும்.
இதேபோல் மேட்டுப்பாளையத்தில் இருந்து திங்கட்கிழமை தோறும் (எண்: 06029) இரவு 7.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.45 மணிக்கு நெல்லையை சென்றடையும்.
இந்த ரயிலானது மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை, போத்தனூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, பழனி, ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லிப்புத்தூர், ராஜபாளையம், சங்கரன்கோவில், கடையநல்லூர், தென்காசி, பாவூர்சத்திரம், கீழக்கடையம், அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, சேரன்மகாதேவி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று சென்றது.
இந்த ரெயில் சேவையானது தொடங்கியது முதல் பல்வேறு கட்டங்களாக நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் சேவை கடந்த 23ம் தேதியுடன் நிறைவு பெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் நெல்லை – மேட்டுப்பாளையம் சிறப்பு ரயில் மார்ச் மாதம் இறுதி வரை நீட்டித்து ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

