கோவையில் நோன்புக்கஞ்சி விநியோகம்

ரம்ஜான் பண்டிகை நோன்பு இன்று தொடங்கிய நிலையில், மாலையில் இஸ்லாமியர்களுக்கு நோன்புக்கஞ்சி வழங்கப்பட்டது.

ரம்ஜான் பண்டிகையை ஒட்டி இஸ்லாமிய மக்கள் ஒரு மாதம் நோன்பு கடைபிடிப்பது வழக்கம். நேற்று மாலை பிறை தென்பட்டதைத் தொடர்ந்து, இன்று முதல் நோன்பு அனுசரிக்கப்படும் என்று தலைமை ஹாஜி அறிவித்தார்.

அதன்படி, கோவையில் உள்ள பள்ளிவாசல்களில் இன்று காலை சிறப்பு வழிபாடு நடத்திய பொதுமக்கள், நோன்பை கடைபிடிக்கத் தொடங்கினர்.

இன்று முதல் 30 நாட்களுக்கு நோன்பு கடைபிடித்த பின்னர், ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.

சூரியன் மறைவுக்குப் பிறகு நோன்பை முடித்துக்கொள்ளும் மக்களுக்கு நோன்புக்கஞ்சி வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில், உக்கடம் அல் அமீன் காலனி சுன்னத் வல் ஜமாத் பள்ளி வாசலில் பொதுமக்களுக்கு நோன்புக் கஞ்சி வழங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, மாலையில் கோவையில் உள்ள பள்ளி வாசல்களில் நோன்பு திறப்பதற்கான உணவு வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

கோவையில் அகற்றப்படும் அரசியல் விளம்பரங்கள்!

தேர்தல் நடத்தை விதிகள் அமலானதையடுத்து கோவையில் அரசு அலுவலகங்கள், பொது இடங்களில் இருந்த அரசியல் விளம்பரங்கள் அகற்றப்பட்டு வருகின்றன.

Video

கோவையில் CRPF வளாகத்திற்குள் நுழைந்து திருப்தியாக சாப்பிட்டு சென்ற யானை…

கோவை: கோவையில் CRPF வளாகத்திற்குள் நுழைந்த யானை சமையலறையில் இருந்த அரிசி, மாவு உள்ளிட்ட பொருட்களை சாப்பிட்டு சென்ற வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சாலை கதிர்நாயக்கன்பாளையம் பகுதியில் மத்திய...