கோவை: ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் (குரூப் 2A) தேர்வு இன்று நடைபெறுகிறது.
கோவையில் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் (குரூப் 2A) தேர்வு இன்று இரண்டு பிரிவுகளாக நடைபெறுகிறது.
கோயம்புத்தூர் மாநகர், டவுன்ஹால் பகுதியில் உள்ள செயின்ட் மைக்கல்ஸ் மேல்நிலைபள்ளி (St. Michael’s Higher Secondary School) பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் (குரூப் 2A) தேர்வு நடைபெறுகிறது.
காலை மற்றும் மதியம் இரண்டு பிரிவுகளாக நடைபெறும் இந்த தேர்வில் காலையில் 331 பேரும் மதியம் 348 பேரும் எழுதுகிறார்கள். தேர்வு எழுத வருபவர்கள் செல்போன் ஸ்மார்ட் வாட்ச் போன்ற மின்னணு பொருட்களை கொண்டு செல்ல கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் தேர்வுக்கு வரும் அனைவரும் தேர்வு மையத்திற்கு செல்வதற்கு முன்பு அவர்களது உடைமைகள் சோதனை செய்யப்பட்ட பிறகு உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.
தேர்வு மையத்தின் அருகில் உள்ள பேருந்து நிறுத்தங்களில் பேருந்துகள் நின்று செல்லும் வகையிலும், தேர்வர்கள் எளிதாக செல்லும் பொருட்டு சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

