கோவை: தேர்தலில் வாக்கு கேட்கும் உரிமை எங்களுக்கு மட்டும் தான் உள்ளது என்றும் தி.மு.க விற்கு கிடையாது என்றும் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
கோவை வடவள்ளி பகுதியில் அதிமுக சார்பில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா மற்றும் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கோவை வடக்கு சட்டமன்ற தொகுதி சார்பில் கழக எம்.ஜி.ஆர் இளைஞர் அணி இணைச் செயலாளர் சந்திரசேகர் ஏற்பாட்டில், மகளிர்க்கு நலத் திட்ட உதவி வழங்கும் விழா முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் நடைபெற்றது.
இந்த விழாவில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சிறப்பு உரையாற்றினார். அப்பொழுது அவர் பேசும் போது, தாலிக்கு தங்கம், மிக்சி, கிரைண்டர் என பெண்களுக்குப் பொற்கால ஆட்சியைத் தந்தவர் அம்மா, ஆனால் இன்றைய தி.மு.க அரசோ பழைய திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டுவதையே பிழைப்பாக வைத்து உள்ளது என்றார். அனைத்து நலத் திட்டங்களையும் அம்மா செய்து உள்ளார் என்றும் தெரிவித்தார்
தி.மு.க அரசு மாணவர்களுக்கு மடிக்கணினியை தேர்தலுக்காக கொடுத்து இருக்கிறார்கள்.
மக்களுக்கு எந்த நலத்திட்டமும் செய்யவில்லை. இந்த வடவள்ளி பகுதியில் அத்தனை திட்டங்களும் பார்த்துப், பார்த்து நாங்கள்செய்து இருக்கிறோம் என்றார்.
முக்கியமாக சாலைகள் எல்லாம் குறுகளாக இருந்தது. ஆனால் அப்போது விரிவாக்கம் செய்து விபத்துகளை குறைத்தோம். உயிர்களை காப்பாற்றி உள்ளோம். அவிநாசி ரோடு பாலம், எடப்பாடி அண்ணனிடம் கேட்டு கட்டினோம். லாலி ரோட் பாலம் அறிவித்ததாகவும், ஆனால் இப்போது கட்டவில்லை.
6 புதிய கல்லூரி, தாலுக்கா, என பல்வேறு கட்டிடங்களை கட்டி உள்ளதாக கூறியவர், இந்த ஆட்சி நாங்கள் அறிவித்த திட்டங்களை நிறுத்துவது மட்டும் தான் என்றும், ஐ.டி துறையில் 50 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்புகளை கொடுத்து இருப்போம், அத்தகைய திட்டங்களை எல்லாம் தி.மு.க அரசு முடக்கிவிட்டது என குற்றம் சாட்டினார்.
கோவை மக்கள் பயன்பெறும் வகையில் அனைத்து திட்டங்களை கொடுத்து உள்ளோம். எங்களுக்கு வாக்கு கேட்கும் உரிமை உள்ளது திமுகவிற்கு கிடையாது என்றார்.
நாங்கள் செய்த திட்டங்களை தி.மு.க வினர் ஸ்டிக்கர் ஒட்டி உள்ளனர்.
மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, பால் விலை உயர்வு, கட்டுமான பொருட்கள் உயர்வு என அனைத்து வகையிலையும் வரிகளை உயர்த்தி மக்களுக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்து மாயை ஏற்படுத்தி உள்ளனர்.
அப்போது என்ன விலைக்கு பொருட்களை வாங்கினார்கள், ஆனால் இப்போது என்ன விலைக்கு வாங்குகிறார்கள் ? என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும் என்றும், மகளிர் உரிமைத் தொகை அனைவருக்கும் கொடுக்க வேண்டும் என்று போராட்டம் ஆக நடத்திய பின்னர்தான் பாதி பேருக்கு கொடுத்ததாகவும், ஆனால் மேலும் பாதி பேருக்கு கொடுத்து உள்ளீர்கள் எனக்கு கேள்வி எழுப்பியவர்,
28000 பணம் கொடுத்து இருக்க வேண்டிய இடத்தில் 5000 கொடுத்து மக்களை ஏமாற்றி உள்ளதாக தெரிவித்தார்.
காவல் துறையினர் யாரும் சரியாக வேலை செய்யவில்லை. கஞ்சா, போதை பொருட்கள் புழக்கம் அதிகரித்து விட்டது. இத்தகைய ஆட்சியை மக்கள் விரைவில் வீட்டுக்கு அனுப்புவார்கள் என்றார்.
இந்த நிகழ்வில் பங்கேற்ற அனைத்து மகளிர்களுக்கும் நலத் திட்டங்களை வழங்கினார்.
இந்த நிகழ்வில் மாவட்ட செயலாளர் அம்மன் கே.அர்ஜுனன் எம்.எல்.ஏ, கே.ஆர். ஜெயராம் எம்.எல்.ஏ, மாணவரணி செயலாளர் சிங்கை ராமச்சந்திரன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

