கோவையில் லஞ்சம் வாங்கிய பஞ்சாயத்து செயலாளர் கையும் களவுமாக சிக்கினார்!

கோவை: கோவையில் வீட்டுமனை அங்கீகாரம் பெற லஞ்சம் வாங்கிய பஞ்சாயத்து செயலாளர் மற்றும் ஊழியர் கையும், களவுமாக கைது செய்யப்பட்டனர்.

கோவை மாவட்டம், அன்னூர் அருகே உள்ள மூக்கனூரைச் சேர்ந்தவர் ராஜபிரபாகரன். இவருக்கு, கோயில்பாளையத்தில் இருந்து கரூவலூர் செல்லும் ரோட்டில், மசக்கவுண்டன் செட்டிபாளையம் பகுதியில் 15 சென்ட் வீட்டுமனை உள்ளது.

இதற்கு வீட்டுமனை அங்கீகாரம் பெற ராஜபிரபாகரன் மசக்கவுண்டன் செட்டிபாளையம் பஞ்சாயத்து அலுவலகத்தின் செயலாளர் ரங்கசாமியிடம் விண்ணப்பம் அளித்தார். அப்போது அவர் அங்கீகாரம் வழங்க வேண்டும் என்றால் லஞ்சம் தர வேண்டும் என்று கூறியதாக தெரிகிறது.

இதை அடுத்து ராஜபிரபாகரன், ரங்கசாமிக்கு 15000 ரூபாய் கொடுத்து உள்ளார். இதை தொடர்ந்து ராஜபிரபாகரனை மீண்டும் அழைத்த ரங்கசாமி மேலும் 19000 ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.

இதனால் அதிருப்பதி அடைந்த ராஜ பிரபாகரன் இதுதொடர்பாக கோவை லஞ்ச ஒழிப்புத் துறை காவல் துறையில் புகார் அளித்தார். பஞ்சாயத்து செயலாளர் ரங்கசாமியை கையும், களவுமாக பிடிக்க முடிவு செய்த லஞ்ச ஒழிப்புத் துறை காவல் துறையினர், ரசாயணம் தடவிய ரூபாய் நோட்டுக்களை ராஜபிரபாகரனிடம் கொடுத்து அனுப்பினர். அதை கொடுக்க ரங்கசாமியிடம் கொடுக்க சென்ற போது, தனது உதவியாளர் பூபதி என்பவரிடம் பணத்தை கொடுக்கும் படி ரங்கசாமி கூறினார்.

அதன்படி பூபதியிடம் பணத்தை கொடுத்த போது அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார், லஞ்சம் வாங்கிய ரங்கசாமி, பிரபு ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Recent News

Video

Join WhatsApp